இந்தியாவில் பயன்பாட்டில் உள்ள கோவிஷீல்ட் தடுப்பூசியில் கோவாக்சினை விட கூடுதலான நோய் எதிர்ப்புத் தன்மை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
முன்களப் பணியாளர்கள் உள்பட பலகோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இரண்டு டோஸ்கள் போட்ட பிறகு கோவிஷீல்ட், கோவாக்சின் இரண்டுமே சிறந்த பலன்களைக் கொடுப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆயினும் கோவிஷீல்ட்டில் கூடுதலான anti body எனப்படும் நோய் எதிர்ப்புக் கூறுகள் கூடுதலாக காணப்படுவதாக புதிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
ஆனால் இந்த ஆய்வின் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததால் இதனை மருத்துவத்துறையினர் ஒரு வழிகாட்டலாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் நிபுணர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...