கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்தி கொள்வோருக்கு, பொது துறையைச் சேர்ந்த சில வங்கிகள் வட்டி சலுகைகளை அறிவித்துள்ளன.
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், யூகோ பேங்க், 999 நாட்களுக்கான வைப்பு நிதிக்கு, கூடுதலாக, 0.33 சதவீதம் வட்டி வழங்குவதாக தெரிவித்து உள்ளது. வரும் செப்., 30 வரை, குறைந்தபட்சம் ஒரு 'டோஸ்' தடுப்பூசி செலுத்தி கொள்வோருக்கும் இந்த சலுகை பொருந்தும் என, வங்கி அறிவித்துள்ளது.
சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, 'இம்யூன் இந்தியா டிபாசிட்' என்ற திட்டத்தின் கீழ், தடுப்பூசி செலுத்தி கொள்வோரின் டிபாசிட்டிற்கு கூடுதலாக, 0.25 சதவீதம் வட்டி தருகிறது. 'மூத்த குடிமக்களின் டிபாசிட்டிற்கு கூடுதலாக, 0.25 சதவீதம் என்ற வீதத்தில், 0.50 சதவீதம் அதிக வட்டி வழங்கப்படும்' என, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா அறிவித்து உள்ளது. இது போல மேலும் பல வங்கிகள் வட்டி சலுகை வழங்க திட்டமிட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...