Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப்பள்ளிகளை நோக்கி குவியும் தனியார் பள்ளி மாணவர்கள் ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் அறிக்கை.

IMG-20200218-WA0000

அரசுப்பள்ளிகளை நோக்கி குவியும் தனியார் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே.இளமாறன் அறிக்கை.

    தமிழ்நாடு அரசு எடுத்துவரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளின் காரணமாக தனியார்பள்ளி மாணவர்கள் சிபிஎஸ்சி மாணவர்கள் அரசுப்பள்ளிகளை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள். பெற்றோர்கள் மத்தியில் அரசுப்பள்ளிகளின் மீது ஏற்பட்டுள்ளத் தாக்கம் வரவேற்புக்குரியது.

  கடந்தகாலங்களில் தனியர் பள்ளிகளின் மீதிருந்தமோகம் படிப்படியாகக் குறைந்து அரசுப்பள்ளிகளின் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கின்றது. இதன் தாக்கத்தின் எதிரொலியாகப் பல தனியார் மூடும் சூழல் உருவாகியுள்ளது. ஏழை எளியமக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டி வணிகநோக்கத்தில் செயல்பட்டவந்தப் பள்ளிகள் அடையாளத்தை இழந்து நிற்கின்றது.இது ஒருவகையில்  கொரோனாவும் பெரும்மாற்றத்தை மட்டுமல்ல விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.தனியர் பள்ளி நிறுவனர்களின் சங்கங்களே எங்களின் பள்ளிகளை மூடிவிடுகின்றோம் என்றநிலையினை உருவாக்கியுள்ளது என்றால் அதுமிகையில்லை.

   மேலும் அரசின் அதிரடி நடவடிக்கையாக அரசுப்பள்ளிகளில் சேர. எட்டாம் வகுப்புவரை மாற்றுச்சான்றிதழ் தேவையில்லை என்ற அறிவிப்பு பெற்றோர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.மேலும் தனியார் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்து 9 ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு சான்றிதழ் தர பெருந்தொகைக் கேட்டு நச்சரிக்கிறார்கள். இந்தப் பெருந்தொற்று காலத்தில் வாழ்வாதாரம் இழந்துத் தவிக்கும் பெற்றோர்களின் அபயக்குரல் வருத்தமளிக்கிறது. ஆகையால்   அப்பள்ளிகள்  EMIS எண்ணை Common pool போடாவிட்டாலும்  அரசு 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும்   ஆதார் அட்டை மூலம் EMIS எண்ணை எடுக்கும் வகையில் மாற்றியமைத்து உதவிடும்படி மாண்புமிகு. முதல்வர் அர்களை  தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில்  பணிவுடன் வேண்டுகிறேன்.

 

 

 பி.கே.இளமாறன்

மாநிலத்தலைவர்

தமிழ்நாடு ஆசிரியர் சங்கம்

98845 86716





1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive