கொரோனா காலகட்டத்தில்
14.06.2021 முதல் பள்ளியை திறந்து தலைமை ஆசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மட்டுமே பள்ளிக்குச் சென்று பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை கூறியுள்ளார்.
அதில் வியப்பான செய்தி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அலுவலகப் பணியாளர்கள்? (எங்கோ). உயர், மேல்நிலைப்பள்ளிகளிலும் அலுவலகப் பணியாளர்கள் சொற்ப நிலையிலேயே இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம், சில பள்ளிகளில் அலுவலக பணியாளர்களே இல்லை! இப்படி இருக்கும்போது, அனைத்து நெறிமுறைகளையும் தலைமையாரியர் ஒருவரே அனைத்து பணிகளையும் முழுவதும் பார்க்கும் பட்சத்தில்... மிகச் சிரமம்... என்பதை அனைவரும் அறிவீர்...
இதை அரசின் காதிற்கு (வெகுவிரைவாக) கொண்டு சென்று, தீர்வு எட்டப்படாத நிலை ஏன்?.... ஏனெனில் பள்ளி கல்வி துறையில் அனைவரும் நமக்கு முக்கியம், அந்நிலையை மறந்து, தன்னை தற்காத்து, பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மட்டுமே எடுத்துவருவது மேலும் வியப்பளிக்கிறது..!
வாழ்க! பள்ளிக்கல்வி சமுதாயம்.
ஏற்கனவே, பொதுமக்கள் தற்போது பள்ளிக் கல்வி சமுதாயத்தை துதிபாடும் நிலையில், தலைமை ஆசிரியரைக் கொண்டு மட்டுமே பள்ளி செயல்பட வேண்டும் என்ற நிலை இருந்தால்.....! மேலும் மக்கள் மத்தியில் கலங்கம்...(.....)!
இப்பணி எவ்வாறு சாத்தியமாகப் போகிறது???
மற்ற அனைத்து துறைகளும் இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல், என்ன ஆனாலும், பள்ளிக்கு சென்று அவர்களுடன் பணிபுரிய காத்திருக்கும் ஓர் ஆசிரியனாக! நன்றி.
வாழ்க பாரதம், வளர்க இந்தியா!
- ஓர் ஆசிரியரின் குமுறல்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...