அரசியல் நடவடிக்கைகளை பார்த்து,
அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' இலவச பயிற்சியை நிறுத்திவிட வேண்டாம்' என,
ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு அமைந்த பின், மத்திய அரசின் கொள்கை முடிவுகள் குறித்து சர்ச்சைகள் எழுந்துள்ளன. முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், நீட் தேர்வு குறித்து தெளிவான நிலைப்பாடு எடுக்காததால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். அதே நிலையை, தி.மு.க., அரசும் கையில் எடுத்துள்ளது.
குறிப்பாக, 'நீட் தேர்வு வேண்டாம்; தேர்வை அனுமதிக்க மாட்டோம்; நீட் தேர்வை ரத்து செய்ய சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவோம்' என, தமிழக அமைச்சர்கள் பேட்டி கொடுத்து வருகின்றனர். இதனால், தமிழகத்தில் நீட் தேர்வு நடக்க வாய்ப்பில்லை என, ஒரு தரப்பினர் தகவல்களை பரப்பினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...