அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஜூன் மாத ஊழியத்திலும் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து கொரோனா கொடுந்தொற்று நிவாரணப் பணிக்கு பயன்படித்திக் கொள்ளமாறு, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை முன்வைத்துள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத்தலைவர் சா. அருணன் வெளியிட்ட அறிக்கை, தமிழ்நாட்டில் கொரோனா கொடுந்தொற்று கட்டுக்குள் கொண்டு வர இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்துவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை நன்றி உணர்வோடு பாராட்டுகிறது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு.
கொரோனா கொடுந்தொற்று தடுப்புப் பணி, உபகரணங்கள் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய கேட்டுக்கொண்டோம். அதனையேற்று மே மாதம் ஊதியத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
மேலும், தொடர்ந்து கொரோனா பணிக்கு நிதி தேவைப்படுவதை அறிகிறோம். ஆதலால் முன்கள பணியாளர்களை தவிர்த்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஜூன் மாதம் ஊதியத்தில் இருந்தும் ஒருநாள் ஊதியத்தை பிடித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பயன்படுத்திக்கொள்ள ேவண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு, அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...