செய்தி வெளியீடு எண் : 232
நாள் : 05.06.2021
செய்தி வெளியீடு
தமிழ்நாட்டில்
மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து அறிக்கை
சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் திரு . ஏ.கே. இராஜன் தலைமையில்
உயர்நிலைக் குழு அமைப்பு - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு . மு.க.
ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வு
முறையால் நமது மாநிலத்தில் உள்ள கிராமப்புற நகர்ப்புற ஏழை எளிய மாணவர்கள் ,
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் . தமிழ்வழியில் கல்வி பயில்வோர்
போன்ற நமது சமுதாயத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு கடந்த சில
ஆண்டுகளாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை
உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர் இதனைக்
கருதியே . சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட
வேண்டுமென்றும் , முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில்
இயற்றப்பட்ட சட்டத்தின்படி , 12 - வது வகுப்பு இறுதித் தேர்வு
மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரி இடங்கள்
நிரப்பப்பட வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி , இதற்கான பல சட்டப்
போராட்டங்களை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது . சமூக நீதியை
நிலைநாட்டும் வரலாற்றுக் கடமை தமிழ்நாட்டிற்கு எப்போதும் உண்டு . இந்தக்
கடமையைத் தொடர்ந்து நிறைவேற்றும் வகையில் , நீட் தேர்வு முறையினால்
ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அகற்றிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த
அரசு எடுத்திட உறுதி பூண்டுள்ளது இந்த நீட் தேர்வு முறையானது சமுதாயத்தின்
பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பாதிப்புகளை
ஏற்படுத்தியுள்ளதா என்பது குறித்தும் , அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு
பாதிப்புகள் ஏற்பட்டிருந்தால் அவற்றை சரி செய்யும் வகையில் , இம்முறைக்கு
மாற்றாக அனைவரும் பயன்பெறத்தக்க வகையிலான மாணவர் சேர்க்கை முறைகளை வகுத்து ,
அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் , அவற்றிற்கான
சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து , அரசுக்குப் பரிந்துரைகளை
அளித்திட ஓய்வு பெற்ற நீதியரசர் திரு . ஏ கே . இராஜன் அவர்கள் தலைமையில் ,
கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு
ஒன்று அமைக்கப்படும் ,
- வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை -9
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...