பழைய வாகனங்களை ஏலம் விட்டு கருவூலத்தில் தொகையை சேருங்கள்: தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு
அரசு அலுவலகங்களில் நிறுத்தப்பட்டுள்ள பழைய பயன்பாடில்லாத வாகனங்களை ஏலம் விட்டு அந்தத் தொகையை அரசு கருவூலத்தில் சேர்க்கும்படி தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்ட உத்தரவில், பயன்பாடற்ற வாகனங்களை அகற்றும் பணிக்கான, நடைமுறைகளை துறைத் தலைவர்களும், மாவட்ட ஆட்சியர்களும் கண்டறிய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம், பயன்பாட்டிலுள்ள வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடம் கிடைக்கும் என்றும், அரசு கருவூலத்துக்கு சிறிது நிதியும் சேரும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...