இதுவரை க்ரீன் டீ உடல் எடையை குறைக்க மட்டுமே பயன்படும் என்று நினைத்து இருப்போம். ஆனால் உண்மையில் க்ரீன் டீ நமது சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் பாலிபினால்கள் மற்றும் ஆறு வகையான கேட்சின்கள் உள்ளன. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் இருப்பதால் சரும செல்கள் அழிவதை தடுக்கிறது. சருமம் வயதாகுதல், சரும வறட்சி போன்ற பல பிரச்சினைகளை களைய க்ரீன் டீ உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் சூரிய ஒளி பாதிப்பு, சரும புற்றுநோய் போன்ற சரும பிரச்சனைகளை களைய உதவுகிறது. க்ரீன் டீ சருமத்தை மென்மையாக்குகிறது, வயதான அறிகுறிகளை குறைக்கிறது.
க்ரீன் டீ என்றால் என்ன
கிரீன் டீ என்பது காமெலியா சினென்சிஸ் என்ற தேயிலை தாவரத்தின் இலைகள் மற்றும் மொட்டுகளிலிருந்து பெறப்பட்ட தேயிலை ஆகும். இதிலுள்ள எபிகல்லோகாடெசின் கேலேட் (ஈ.ஜி.சி.ஜி) சிறந்த ஆய்வு செய்யப்பட்ட கேடசின் ஆகும். கிரீன் டீயில் காஃபின் மற்றும் டானின்களும் உள்ளன, அவை இரத்த நாளங்களை சுருக்கி, வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் அழற்சியை போக்குகிறது.
க்ரீன் டீயை எப்படி பயன்படுத்தலாம்
க்ரீன் டீயை தினமும் குடிப்பது ஆரோக்கியமானது. இவை சினெர்ஜிஸ்டிக் முறையில் செயல்படுகின்றன. இதில் விட்டமின் சி இருப்பது சரும செல் சிதைவை குறைக்க உதவுகிறது. இதிலுள்ள எபிகலோகேட்சின் கலேட் உடன் ஹைலூரோனிக் அமிலம் சேர்க்கப்படும் போது மேம்பட்ட தோல் ஊடுருவலையும், வலுவான ஈரப்பதத்தையும் கொடுக்கும். அதனால் தான் க்ரீன் டீயை கொண்டு க்ளீன்சர், சீரம், மாய்ஸ்சரைசர்கள் மற்றும் பேஸ் மாஸ்க் போன்றவற்றை தயாரிக்கின்றனர். ஆனால் க்ரீன் டீயை கொண்டு மேற்பூச்சு செய்வது மிகவும் கடினம். ஏனெனில் இதிலுள்ள கேட்சின்கள் அதிக வெப்பநிலையிலும் அடிப்படை pH அளவிலும் நிலையற்றது. எனவே க்ரீன் டீயை நீங்கள் சேமித்து வைக்க குளிர்ந்த சூழ்நிலை சிறந்தது.
சரும பாதுகாப்பு அளிக்கிறது
க்ரீன் டீ சரும பிரச்சனைகளான முகப்பரு, ரோசாசியா, தடிப்புத் தோல் அழற்சி, வைரஸ் மருக்கள் மற்றும் தோல் புற்றுநோய் போன்ற பல்வேறு தோல் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சரும பாதிப்பை ஏற்படுத்தும் சூரியனின் புற ஊதாக் கதிர்களில் இருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது. தோல் செல்களில் ஏற்படும் டி. என். ஏ சேதத்தை எதிர்த்து போராடு கிறது. சரும புற்றுநோயிலிருந்து காக்கிறது.
வயதாகுவதை தடுக்கிறது
க்ரீன் டீயில் உள்ள கேட்சின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்கள் சருமம் வயதாகுவதை தடுக்கிறது. க்ரீன் டீயில் விட்டமின் பி12 இருப்பதால் சருமம் இளமையாக இருக்க உதவுகிறது. விட்டமின் பி12 சருமம் இளமையாக இருக்க உதவி செய்யும். சரும தொய்வை போக்கி சருமம் இறுக்கமடைய உதவுகிறது.
எண்ணெய் சருமத்தை கட்டுப்படுத்துதல் :க்ரீன் டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இது சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை கட்டுப்படுத்தி பருக்களை போக்க உதவுகிறது. இதிலுள்ள பாலிபினால்கள் எண்ணெய்யை கட்டுப்படுத்தும் வேலையை செய்கிறது.
ஈரப்பதத்தை அளிக்கிறது
க்ரீன் டீயில் விட்டமின் ஈ உள்ளது. இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. க்ரீன் டீ சாற்றை கைகளில் தடவி வர உங்க கைகளில் உள்ள சருமம் மென்மையாகிறது. சருமம் கடினமாக ஆவது தடுக்கப்படுகிறது.
சருமம் சிவந்து போதல் :க்ரீன் டீயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சரும அரிப்பு, சருமம் சிவந்து போதல் மற்றும் வீக்கத்தை போக்க உதவுகிறது. சரும நடிப்பை போக்க உதவுகிறது. எக்ஸிமா, சொரியாஸிஸ் மற்றும் பொடுகு போன்ற தொல்லைகளை போக்க உதவுகிறது.
க்ரீன் டீயின் பக்க விளைவுகள்
சரும மருத்துவர்கள் கூற்றுப்படி க்ரீன் டீ எந்த வித அழற்சியையும் ஏற்படுத்துவதில்லை. க்ரீன் டீ எல்லா சருமத்திற்கும் ஏற்றது. இருப்பினும் க்ரீன் பேஸ் மாஸ்க் முதன் முதலாக பயன்படுத்துகிறீர்கள் என்றால் சிறிய அளவில் எடுத்து உங்களுக்கு ஒத்துக் கொள்கிறதா என முதலில் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். சென்ஸிட்டிவ் சருமம் உடையவர்களுக்கு சில சமயங்களில் சரும அரிப்பு, சிவத்தல், வீக்கம் மற்றும் எரியும் உணர்வு ஏற்படலாம். எனவே உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் சரும நிபுணரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகு தொடங்கலாம்.
முடிவு
உங்க அன்றாட அழகு பராமரிப்பில் க்ரீன் டீயை சேர்த்து வரலாம். வீட்டிலேயே க்ரீன் டீ பேஸ் மாஸ்க்கை தயாரித்து பயன்படுத்தி வரலாம். நீங்கள் க்ரீன் டீயை மேற்பூச்சாக பயன்படுத்துவது எளிதானது. இதையே நீங்கள் க்ரீன் டீயை உட்புறமாக எடுத்துக் கொள்ளும் போது குயினோலோன் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், சில பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள், ஆன்டிகோகுலண்டுகள், சில ஆண்டிடிரஸண்ட்ஸ், ஃபீனைல்ப்ரோபனோலாமைன், ஆம்பெடமைன்கள் மற்றும் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த மருந்துகளும் தவிர்க்கப்பட வேண்டும். எனவே நீங்கள் க்ரீன் டீயை குடிப்பதற்கு முன்பு உங்க மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...