நடப்பு
ஆண்டிற்கான 15CA/15CB வருமானவரி படிவங்களை மின்னணு முறையில் தாக்கல்
செய்வதற்கு ஜூன் 30ம் தேதி
வரை கால அவகாசம் ட்டிக்கப்பட்டுள்ளதாக
வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
நடப்பு
ஆண்டிற்கான வருமான வரி தாக்கல்
செய்வதற்கான அவகாசம் வரும் ஜூலை
31ம் தேதியாக இருந்த நிலையில்,
செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்படுவதாக வருமான
வரித்துறை அறிவித்தது. மேலும், வருமானவரி தாக்கல்
செய்வதற்கான புதிய இணையதளத்தையும் ஜூன்
7ம் தேதி முதல் வருமான
வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.
ஆதார் கார்டில் பிறந்த தேதியை புதுப்பித்தல் – சுய சேவை போர்டல்!
வருமானவரி
தாக்கல் செய்வதற்கு
(www.incometaxindiaefiling.gov.in) என்ற
ஒரு இணையதளம் பயன்பாட்டில் இருந்த நிலையில், புதிதாக
(www.incometaxgov.in) என்ற
இணையத்தளத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வருமான
வரித்துறை திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை அறிக்கை
ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், வருமானவரி சட்டம்
1961-ன் படி 15CA/15CB படிவங்களை மின்னணு முறையில் தாக்கல்
செய்ய வேண்டும். தற்போது, வரிசெலுத்துவோர் 15CA படிவத்தை, 15CB படிவத்தில் பட்டய கணக்காளர் சான்றிதழுடன்
மின்னணு-தாக்கல் இணையதளத்தில் பதிவேற்றம்
செய்கின்றனர்.
அதன் பின்னர், வெளிநாட்டு வருமானம் இருந்தால் அதன் நகல் டீலரிடம்
சமர்ப்பிக்க வேண்டும். புதிய மின்தாக்கல் இணையளத்தில்
www.incometax.gov.in, 15CA/15CB படிவங்களை
தாக்கல் செய்வதில் வரிசெலுத்துவோர் சில சிரமங்களை சந்தித்ததால்,
இந்த படிவங்களை அங்கீகரிக்கப்பட்ட டீலரிடம் 2021 ஜூன் 30-ம் தேதிக்கு
முன்பாக கைப்பட சமர்ப்பிக்க முடிவு
செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வருமானத்துக்கான படிவங்களை அங்கீகரிக்க டீலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆவண அடையாள எண்-ஐ உருவாக்குவதற்காக, இந்த படிவங்களை புதிய மின்னணு-தாக்கல் இணையளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான வசதி பின்னர் வழங்கப்படும் என்று வருமானவரித்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...