இந்த நிலையில், 12வகுப்புத் தேர்வை ரத்து செய்ததை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் தொடர்ந்து பொதுநல வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது. கடந்த ஆண்டு தேர்வு எழுதாமல் 11ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தான் இந்த ஆண்டும் பிளஸ் 2 பயின்று வருவதாக மனுதாரர் சுட்டிக் காட்டினார். தற்போது பெரும்பாலான பள்ளிகளில் வகுப்புகள் முழுமையாக நடைபெறாத சூழலில் யூஜிசி, மெடிக்கல் கவுன்சில்,ஏஐசிடிஇ, நர்சிங் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகளோடு கலந்து ஆலோசிக்காமல் பிளஸ் 2 தேர்வை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்து இருப்பதாக அவர் புகார் தெரிவித்தார். எனவே 2 மாதங்களுக்கு பிறகு பிளஸ் 2 தேர்வு நடத்த உத்தரவிட அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பேனர்ஜி அமர்வு பிளஸ் 2 தேர்வு ரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் இடைக்கால தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தனர். மனு மீது பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை 3ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Cancel panathu nalathu
ReplyDelete