இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
''புதுவையில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மர் மையங்களில் பயிலும் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள், பிஎஸ்சி நர்சிங் (முதல், இரண்டாம், மூன்றாமாண்டு) மாணவர்கள், பிஎஸ்சி துணை மருத்துவப் படிப்புகள் (முதல், இரண்டாமாண்டு) பயிலும் மாணவர்களுக்கு வரும் ஜூலை 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. எம்பிபிஎஸ் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர்களுக்குத் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும்.
கரோனா தடுப்பூசி கட்டாயம்
மாணவர்கள் கரோனா தடுப்பூசியைக் கண்டிப்பாகச் செலுத்திக்கொள்ள வேண்டும். ஜிப்மர் வளாகத்தில் மாணவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை எங்கு செலுத்தியிருந்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசியை ஜிப்மர் வளாகத்தில் செலுத்திக் கொள்ளலாம்.
கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள், கரோனா பரிசோதனைக்குப் பிறகே ஜிப்மர் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். மற்ற மாணவர்கள் நேரடியாக அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைகளுக்குச் செல்லலாம்.
வகுப்புகளில் மாணவர்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வகுப்புகளிலிருந்து இடைநீக்கமும் செய்யப்படுவர்''.
இவ்வாறு ஜிப்மர் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...