ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - கோவிட் -19-இரண்டாம் அலை -ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகள்
கிராம ஊராட்சிகள் மேற்கண்ட பணிகளை மேற்கொள்ளும் போது கிராம அளவில் உள்ள பல்வேறு அரசு அமைப்புகள் மற்றும் சமுதாய அமைப்புகளின் ( CBOS ) , பங்களிப்போடு இதனை போற்கொண்டால் மிகவும் பயனுள்ளதாக அமையும் . கிராம ஊராட்சி அளவில் 5 நிலைக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன . அவற்றில் வளர்ச்சிக் குழுவின் பணி இப்பேரிடர் தொற்றில் முக்கியமானதாகும் . ஒவ்வொரு ஊராட்சியிலும் அமைக்கப்பட்டுள்ள வளர்ச்சிக்குழுவில் 9 உறுப்பினர்கள் உள்ளனர்.
இக்குழுவின் தலைவராக அவ்வூராட்சியின் பெண் வார்டு உறுப்பினர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு இக்குழுவில் கீழ்க்கண்ட உறுப்பினர்கள் உள்ளனர்.
1. கிராம காட்சியின் இரண்டு வார்டு உறுப்பினர்கள்
2 சத்துணவு அமைப்பாளர்
3. உள்ளூர் தொடக்க அல்லது நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
4 அரசு சாரா தொண்டு நிறுவா அமைப்பாளர் ( அ ) சமூகப்பணியாளர்
5. கபடிதவிக் குழு உறுப்பினர்
6. கிராம சுகாதா செவிலியர்
7. துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
8. தொடக்க வோண் கட்டுறவு சங்க செயனர்
மேற்படி வளர்ச்சிக் குழுவானது நோய் தடுப்பு மற்றும் தடுப்பூசி முகாம்களை நடத்துதல் , மக்கள் நலம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துதல் , சுகாதாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்தல் போன்ற முக்கிய பணிகளில் அரசாணையில் குறிப்பிட்டவாறுாடுபட வேண்டும். இப்பேரிடர் காலத்தில் பாண்டிமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் டி இம்முழு ஊராடங்கு காலத்தில் ஊராட்சிகள் காய்கறிகள் , பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஊராட்சி வாழ் மக்களின் இல்ல அளவிலேயே கிடைத்திடும் வகையில் கிராம ஊராட்சிகள் வாகனங்களின் மூலம் விற்பனை செய்து வருகின்றன . இந்நடவடிக்கையானது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காலத்திலும் எந்தவொரு தொய்வுமின்றி நடைபெற வேண்டும் . கிராம ஊராட்சியின் ஒவ்வொரு வார்டு மற்றும் தெருக்களில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்திட வேண்டும். மேலும் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊடங்கு காலத்தில் மளிகைப் பொருட்களும் தங்கு தடையின்றி ஊக வாழ் மக்களுக்கு கிடைத்திடும் வகையில் கிராம ஊராட்சிகளில் உள்ள மளிகைப் பொருள் விற்பனையாளர்கள் மூலம் அவ்வூராட்சியின் அனைத்து தெருக்களின் வழியே தன்ளுவண்டிகள் அல்லது வண்டிகளின் மூலமாகவோ விற்பனை செய்ய ஏதுவாக விற்பனையாளர்களுக்கு அனுமதி அளித்திடவேண்டும்.
இவ்வாறு அனுமதி கேட்டு விற்பனையாளர்கள் அங்கும் பட்சத்தில் எந்தவொரு காலவிரயமும் இன்றி அனுமதியளித்திட வேண்டும் . மேலும் அரசு அறிவித்துள்ளவாறு , இணையம் வழி மற்றும் தொலைபேசி வாயினாக வாடிக்கையாளர்கள் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்க வேண்டும் . மேலும் இந்நேர்வுகளில் தமிழ்நாடு அரசு | மாவட்ட ஆட்சியர்கள் அவ்வப்போது அளிக்கும் அறிவு ரகளை பின்பற்ற வேண்டும். மேலும் பாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்கள் நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகித்திடும் போது உரிய தனி மனித இடைவெளியை பின்பற்றுதல் , முக்கவசம் அணிந்திருத்தல் , கைகளைச் கத்தப்படுத்திட உரிய கிருமி நாசினி பொருட்களை நியாய விலைக் கடைகளின் முன்பு பொதுமக்கள் பயன்படுத்திடும் வகையில் ஏற்பாடு செய்திட வேண்டும். மேலும் , ஊராட்சிகளில் தடுப்பூசி முகாம்களை அமைத்து ரக வாழ் மக்கள் நோய் தொற்றுக்கெதிரான எதிர்ப்பாற்றலைப் பெற்றிட ஏற்பாடு செய்திட வேண்டும் . ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுரைகளோடு இவ்வறிவுரைகளையும் பின்பற்றி மேற்கொண்ட நடவடிக்கை விவரங்களை இவ்வியக்கக்கத்திற்கு அனுப்பி வைத்திட தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...