Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12 ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து - வாழ்த்தி வரவேற்கிறோம்!

 


 

12 ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து வாழ்த்தி வரவேற்கிறோம்!



தற்போதுள்ள கொரானா இரண்டாம் அலையை முழுமையாக கடந்துவிடாமல் இருக்கும் இந்நிலையில் ஒரு மாணவர் கூட கொரோனா நோயால் பாதிக்கக்கூடாது என்ற நல்லெண்ணம் காரணமாகவும் தேர்வை தள்ளி வைப்பதால் மாணவர்கள் மேலும் மனதளவில் பாதிக்கக் கூடும் எனும் மன நல மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை கருத்தில் கொண்டும் மிக நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசை பாடசாலை மனதார பாராட்டுகிறது.

 தொடர்ந்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையிலும் இதேபோன்று அனைவரின் கருத்தையும் கேட்டு அறிந்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய வகையில், யாரும் பாதிக்கப்படாத வகையிலும் ஒரு மிகச்சிறந்த வழிகாட்டு நெறிமுறையை தமிழக அரசு வழங்கும் எனவும் எதிர்பார்த்து உள்ளோம்.

நன்றி!




8 Comments:

  1. Arrear exam epadinu sollu ga

    ReplyDelete
  2. போங்கடா சொம்பு நக்கிகளா. ஆரம்பத்தில் இருந்தே பரீட்சை வேண்டாம்னு தானே சொல்லிட்டு இருக்கோம்

    ReplyDelete
    Replies
    1. We accept your comments. Sorry,

      But already we are ready to publish half part article to oppose in 12th exam.

      But we are waiting due to some politics issue. What we do bro? Its ok, now we will publish that article in this comment.

      By
      Padasalai Admin.

      Delete


  3. 12ஆம் வகுப்பு தேர்வு நடத்த வேண்டுமா? வேண்டாமா? - பாடசாலையின் சிறப்பு தலையங்கம்.


    இது குறித்து ஆராயும் முன் நாம் சில காரணிகளை ஆராய்வோம்.

    பாடதிட்டத்தில் 30 சதவீதம் நீக்கம் செய்யப்பட்டது எனும் கருத்து - முழுமையாக நீக்கப்பட்டதா? உதாரணமாக 10 பாடங்கள் இருப்பின் அதில் 3 பாடங்கள் முழுமையாக நீக்கப்பட்டதா? அல்லது 10 பாடங்களும் இருந்து, அதில் உள்ள அனைத்து கருத்துகளையும் படிக்கவேண்டி இருப்பின் பயிற்சி பெற வேண்டிய சில, சில முக்கியமற்ற பத்திகள் அல்லது பயிற்சிகள் மட்டும் நீக்கப்பட்டதா என ஆராய வேண்டும்.
    சரி! - 1000 சதவீதம் பாடத்தை ஆசிரியர்களால் ஓராண்டில் ஆழ்ந்து திறம்பட கற்பிப்பது போல், 70 சதவீதம் பாடத்தை பிப்ரவரியில் துவங்கி ஏப்ரல் பாதி வரையிலான இரண்டரை மாத இடைவெளியில் முழுமையாக, திறம்பட ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டதா? அல்லது எப்போது வேண்டுமானாலும் கொரோனா அதிகமாகி பள்ளி மூடக்கூடம் என்ற எண்ணத்தில் அரி,பரியாக நடத்தப்பட்டதா? ஏனெனில் 12ஆம் வகுப்பு கணிதம் போன்ற பாடங்களை முழுமையாக கற்பிக்க போதுமான நேரம் இல்லாமல் போனது என்பது சிலரின் கருத்து.
    ஆசிரியர்கள் திறம்பட கற்பித்ததாகவே கருதினாலும், மாணவர்கள் முழுமையான கல்வியாண்டில் கற்பது போல் பொறுமையாக, முழுமையாக, உரிய கற்றல் திறன்களை உள்வாங்கி கற்றுள்ளனரா என்பதையும் உறுதி படுத்திக்கொள்ள வேண்டும்.
    ஏனெனில் இரண்டரை மாத இடைவெளியில் தான் பாடங்களும் நடத்தப்பட்டன, சில அலகுத்தேர்வுகளும், மாதிரி பொதுத்தேர்வுகளும் மாவட்ட அளவில் நடத்தப்பட்டன. எனவே இத்தேர்வு நாட்களை தவிர்த்து மீதமுள்ள நாட்கள், நேரங்களில் மட்டுமே பாடங்கள் கற்பித்தல் பணி நடைபெற்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
    தேர்வு வைக்கப்படலாமா, வேண்டமா என்பது குறித்து மாணர்களின் கருத்தும் உரிய முறையில் கேட்கப்பட வேண்டும். ”கோழியை கேட்டா குருமா அரைக்கமுடியும்” என சிலர் கூறலாம். இங்கு மாணவர்கள் கோழியும் அல்ல, இதரர் குருமா அரைக்கும் எஜமானர்களும் அல்ல. எனவே மாணவர்களின் கருத்தையும் நிச்சயம் கணக்கில் கொள்ள வேண்டும்.
    கொரோனா காரணமாக பல குடும்ப உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் அக்குடும்பங்களில் உள்ள மாணவர்களின் மன நிலை எந்த விதத்தில் தேர்வுக்கு தயாராக இருக்க கூடும் என்பதையும் குழந்தைகள் மனநல நிபுணர்களிடம் அறிக்கை பெற வேண்டும்.
    ஆசிரியர்கள் பலருடன் கலந்துரையாடிய போது ”கொரோனா குறைந்த பிறகு பொதுத்தேர்வு வைக்கப்பட வேண்டும்” என சிலர் கூறினர். அவர்களிடம் சில கேள்விகள்!
    கொரோனா குறைந்த பிறகு என்றால் எதுவரை காத்திருப்பது என கால வரையறை நிர்ணயிக்க வேண்டும். ஜுன் இறுதி வரையிலா, அல்லது ஜீலை இறுதி வரையிலா அல்லது ஆகஸ்டு மாத இறுதி வரையிலா காத்திருக்க வேண்டும் என்பதையும் வரையறுக்க வேண்டும். எப்போது குறைய வாய்ப்புள்ளது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவிடமிருந்து அரசு அறிக்கை பெற வேண்டும்.
    தற்போது லாக்டௌன் இருப்பதால் கொரோனா கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதால் லாக்டௌன் முடிந்த பிறகு மீண்டும் கொரோனா அதிகரிக்கவும் வாப்பு உள்ளது என சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை டீன் மற்றும் வேறு சில மருத்துவர்கள் தொலைக்காட்சி பேட்டிகளில் கூறியுள்ளதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
    எனவே தமிழகம் தவிர இதர மாநில கல்லூரிகளில் உயர்கல்வி தொடங்க இருப்பவர்களுக்கு நமது மாநில தேர்வுகள் தள்ளி போவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்ப்பது எப்படி என்பது குறித்தும் ஆராய வேண்டும்.

































    ReplyDelete
  4. நானும் கணித ஆசிரியர் என்ற முறையில் உங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன். மாணவர்களுக்கு புரிந்ததா இல்லையா என்று தெரியாமல் வேகமாக கற்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம் நண்பரே... தங்களின் கருத்துக்கு நன்றி admin அவர்களே...

    ReplyDelete
    Replies
    1. Thanks sir, Thanks for your real words!

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive