சிபிஎஸ்இ
பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள
உச்சநீதிமன்றம், மதிப்பெண்கள் வழங்குவதற்காக மாணவர்களை எப்படி மதிப்பீடு
செய்யப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளது.
கொரோனா
இரண்டாவது அலை காரணமாக, சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம்,
மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அமைச்சர்கள்
மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, ‛ மாணவர்களின் நலன்
கருதி பிளஸ் 2 தேர்வை ரத்து செய்யப்படும்' என அறிவித்தார்.
இந்நிலையில்,
தேர்வு ரத்து கோரிய வழக்ககை இன்று விசாரித்த நீதிபதிகள் ஏஎம் கன்வில்கர்
மற்றும் தினேஷ் மகேஸ்வரி ஆகியோர் , பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது
மகிழ்ச்சி அளிக்கிறது. அதேநேரத்தில், மதிப்பெண் வழங்குவதற்காக மாணவர்களை
மதிப்பீடு செய்வதற்கான வழிகள் என்ன என்பதை பார்க்க விரும்புகிறோம்.
மாணவர்கள்
கல்லூரியில் செல்வதற்கும், வெளிநாட்டிற்கும் செல்ல உள்ளதால், அவர்களை
மதிப்பீடு செய்வதற்கு நிறைய அவகாசம் வழங்க முடியாது. மதிப்பெண் வழங்குவது
தொடர்பாக 2 வாரங்களில் அனைத்து முடிவுகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...