உங்களுக்கு உடல்நலக் குறைவு என அறிந்தவுடன்.
பொறுமை யாக இருங்கள். நினைவில் கொள்ளுங்கள் கோவிட்-19 பாதிக்கப்பட்ட பெரும்பாலனவர்கள் குணமடைகிறார்கள் மற்றும் அவர்கள் மருதுவமைனையில் அனுமதிக்கப்பட தேவையில்லை.
1⃣ சுய-தனிமைபடுத்திக் கொள்ளுங்கள். கோவிட் பரிசோதனை செய்துகொள்வதற்கோ, பரிசோதனை முடிவிற்கோ காத்திருக்க வேண்டாம்.
2⃣ ஆலோசனைக்கு ஒரு மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.
3⃣ ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை அல்லது அடிக்கடி உங்களின் மூச்சு வேகமாகும் போது உங்களது ஆக்சிஜென் அளவினை பரிசோதியுங்கள்.
📍 ஆக்சிமீட்டரின் ஆக்சிஜென் அளவு 94% க்கும் கீழே காண்பித்தால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடவும்.
4⃣ ஒவ்வொரு 6 மணிநேரத்துக்கும் உங்களது உடல் வெப்பநிலையை கண்காணியுங்கள். உங்களுக்கு காய்ச்சல் இருந்தால் அடிக்கடி கண்காணியுங்கள்.
📍 3 நாட்களுக்கு உடல் வெப்பநிலை 101F (38C) தொடர்ந்தால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாடவும்.
5⃣ இந்த நிகழ்வுகளில் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் ஒரு அவசர மருத்துவ உதவியை நாடுங்கள்.
📍 மோசமான சுவாசக் குறைபாடு ஏற்படும்போது.
📍 உதடு அல்லது முகம் நீல நிறமாகும்போது.
📍 தன்னிலை இழத்தல் எனும் நிலை அதிகரிக்கும்போது.
📍 மார்பு பகுதியில் தொடர் வலி அல்லது அழுத்தம் ஏற்படும்போது.
📍 மந்தமான பேச்சு அல்லது வலிப்புதாக்கங்கள்.
📍 எழுந்திருக்கவோ அல்லது விழித்திருக்கவோ முடியவில்லை என்ற நிலையின்போது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...