Dr. பிரகாஷ் மூர்த்தி MBBS,MD மன்னார்குடி
மனிதர்கள் ஜாக்கிரதை !
*மனிதன், தற்போது சக மனிதனின் நலனை மறந்து, சமூக பொறுப்பை குழிதோண்டி புதைத்து, சுயநலம் பிடித்து அலைந்து கொண்டிருக்கிறான்.*
★சம்பவம் 1
20/5/2021
ஜுரம், இருமல் என்று ஒரு தம்பதி வருகின்றனர். அதற்கான மாத்திரை எழுதி கொடுத்து , நாளை அரசு மருத்துவமனையில் கொரோனா டெஸ்ட் செய்ய அறிவுறுத்தி அனுப்பினேன். இன்று அவர்கள் மீண்டும் வந்தார்கள். ரத்த டெஸ்ட் பண்ணி பார்க்கிறோம் என்று சொன்னார்கள். CRP பாசிடிவ் என்று வந்தது . CRP பாசிடிவ் என்று வந்தால் கொரோனா பாசிட்டிவ் என்று வருவதற்கு வாய்ப்புள்ளது. நாளை அரசு மருத்துவமனையில் கொரோனா டெஸ்ட் எடுங்கள் என்று சொன்னேன். சரி என்று சொல்லிவிட்டு வெளியே சென்ற அவர்கள், 5 நிமிடம் கழித்து மீண்டும் உள்ளே வந்து சொல்கிறார்கள் " 19/5/2021 அன்றே எங்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என்று முடிவு வந்து விட்டது. " "அதை ஏன் மொதல்லயே சொல்லலை ?" .......பதில் இல்லை அவர்களிடம்.
"இந்த 1 வாரத்தில் எத்தனை பேருக்கு அதை பரப்புநீங்க ? "ஆண்டவனுக்கே வெளிச்சம்...
★ சம்பவம் 2
14/5/2021
வயதான தாத்தா ஒருவரை stretcher இல் வைத்து அவரது இரு மகன்கள் " நிக்காமல் வயிற்று போக்கு போகிறது " என்று அழைத்து வருகின்றனர். "ஆக்சிஜன் அளவு 89% தான் இருந்தது. ஆக்சிஜன் கம்மியா இருக்கு. இப்போ வயிற்று போக்கு நிக்கிறதுக்கு IV FLUIDS போட்டுக்கோங்க. பிறகு GH க்கு போய் கொரோனா டெஸ்ட் பார்க்கணும்" என்று சொன்னேன். குளுக்கோஸ் பாட்டில் போட்டுவிட்டு திரும்பி போகும் போது மீண்டும் அவர்களிடம் சொன்னேன் "மறக்காம கொரோனா டெஸ்ட் எடுங்க " அதற்கு அவரது மகன்கள் .
" போன வாரமே பாத்தாச்சு. அவர் அல்ரடி கொரோனா பாசிட்டிவ் தான் " என்று பதிலளித்தனர்
"அப்புறம் ஏண்டா சுத்திக்கிட்டு இருக்கீங்க. GH ல போய் அட்மிசன் போட வேண்டிய தானே?
"GH வேண்டாம் சார். அங்க ஒரே கொரோனா பேசண்ட்டா இருக்காங்க "
★ சம்பவம் 3
3/5/2021
கடுமையான மூச்சுத்திணறளுடன் ஒரு பெண் வருகிறார். Nebuliser வைத்து, வீசிங் மாத்திரை, சிரப் எழுதி கொடுத்தம் குறையலை. அடுத்த நாள் கொரோனா டெஸ்ட் எடுக்க சொன்னேன். எடுத்தாச்சு ஆனால் கொரோனா நெகட்டிவ். சரி GH லேயே CT ஸ்கேன் பார்க்க சொன்னேன் .அதில் 80% நுரையீரல் பாதிப்பு இருக்கவே மெடிக்கல் காலேஜ் போய் அட்மிசன் ஆக சொன்னேன். 10 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் இறக்கிறார்.
அடுத்த வாரத்தில் வரிசையாக அவரது உறவினர்கள் கொரோனா அறிகுறியுடன் வந்தனர். அவர்களின் ஒருமித்த பதில் " அவரது இறப்பிற்கு சென்று விட்டு தலை குழிச்சோம். இரண்டு நாள் கழித்து ஜுரம் "
"அவர் தான் கொரோனா பாதித்து இறந்தாரே..careful ah இருக்க வேண்டாமா?" என்று கேட்டேன்.
"அவருக்கு கொரோனா இல்லைனு சொன்னாங்களே" என்றனர்.
மேற்கூறிய நபர்கள் உங்கள் வீட்டு அருகில் இருப்பார்கள். தங்களுக்கு கொரோனா பாதித்த விஷயத்தை உங்களிடம் சொல்ல மாட்டார்கள். அதற்கு மாறாக கீழே உள்ள வார்த்தைகளை பயன் படுத்து வார்கள்
★லேசான சளி, ஜுரம். அப்புறம் அதாவே சரி ஆயிட்டு
★வருஷ வருஷம் இந்த வெயில் காலத்துல எனக்கு ஜுரம் வரும்.அதான் இது
★சும்மா நுரையீரல்ல சளி இருக்காம்
★சும்மா லேசா கிருமி இருக்காம்
★மழை பெய்துனு மாடில காயுற துணி எடுத்தேன்ல, அப்போ நெனஞ்சிட்டேன். அதான் லேசா இருமல்
★urine ல கிருமி இருக்காம்
★மஞ்ச காமாலையா இருக்கும்.அதான் பசிக்கல
கொரோனா என்ற வார்த்தை மட்டும் அவர்கள் வாயிலிருந்து வராது. மாறாக என்னென்ன சொல்ல முடியுமோ சொல்லுவார்கள்.
கடுமையான லாக்டவுன் போட்டும்,கொரோணா குறையாமல் இருக்க இவர்களே காரணம்.
"மனிதர்கள் ஜாக்கிரதை !"
*Dr. பிரகாஷ் மூர்த்தி* *MBBS,MD*
*மன்னார்குடி*
news ல பாத்தா டாக்டர்ஸ் பத்தலன்னு சொல்ராஞ்க. இந்த டாக்டர் treatment பாக்காம உக்காந்து கட்டுறை எழுதிட்டிருக்காரு?
ReplyDeleteமுழிச்சிப்பாருஞ்க, பெருசா கொரோனா, அது இதுன்னு நாமதான் பயப்படரோம். ஆனா, மனிதனவிட பரினாம வளர்ச்சியிளையும், நோய் எதிர்ப்புத் திறன்ளையும் குறைந்த விலஞ்குகள்பறவைகள்/பூச்சி இனஞ்கள் எல்லாம் எப்பவும்போலத்தானயா இருக்கு?
ஏர்க்கனவே மனிஶ பயலாம் பீதில கெடக்கனுவோ. இன்னும் எதுக்குயா விழிப்புணர்வுஞ்குரப் பேர்ல பயமுருத்துரீஞ்க?
போய் பொழப்பப் பாருஞ்கய்யா!