ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்திரவின்படி , ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் , சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோரால் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளும் பொருட்டு , வீடு வீடாக சென்று கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என்பதை அறிய கணக்கெடுப்பு பணிக்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தவறாது மேற்படி பணியினை மறு அறிவிப்பு வரும் வரை கண்காணித்து அறிக்கையினை உரிய அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இப்பணியினை மேற்கொள்ளாத ஆசிரியர்களின் பெயர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தமது ஆளுகையின் கீழ் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் , மேற்படி கணக்கெடுப்பு பணிக்கு நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணிக்கு செல்வதை உறுதி செய்திட வேண்டும்.
இப்பணியினை கண்காணித்து , கீழ்காணும் படிவத்தில் அறிக்கையினை , தினசரி மதியம் 12 மணிக்குள் , ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு ( ceoerdb4@gmail.com ) அனுப்பி வைக்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...