வரும் கல்வி ஆண்டு முதல் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின்படி இயங்க உள்ளதாக கல்வித்துறை அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் புதிய திட்டங்கள்:
நாட்டின் பல்வேறு வகையான பொதுத்தேர்வுகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி தான் நடத்தப்படுகிறது. இதனை ஆய்வு செய்த ஆந்திர மாநில அரசு, அரசு பள்ளிகளையும் சிபிஎஸ்இ வாரியத்தில் இணைக்க முடிவு செய்தது. முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், ஒரு திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பை சீரமைப்பதற்காக உலக வங்கியில் இருந்து ரூ.1,860 கோடியை 2.5 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வாங்க கல்வித் துறைக்கு ஒப்புதல் அளித்தது.
வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி செயல்படும். ஏழாம் வகுப்பில் இருந்து 44,639 பள்ளிகள் சிபிஎஸ்இ வாரியத்தில் சேர்க்கப்படும். வரும் 2024- 2025ம் கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ வாரியத்தின்படி, 10ம் வகுப்பு முதல் தொகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள்.
21 ஆம் நூற்றாண்டின் சவால்கள் மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு குழந்தைகளை தயார்படுத்துவதற்கான நீண்டகால நோக்கத்துடன், அரசு பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளை தயார்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த சிறப்பான மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில், கன்வீனர் ஒதுக்கீட்டின் கீழ் நிறுவப்பட்ட பல்கலைக்கழகங்களில் 35 சதவீத இடங்களை நிரப்ப ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ப்ரோடதூரில் உள்ள யோகி வேமனா பல்கலைக்கழகத்தின் கீழ் ஒரு பொறியியல் கல்லூரியை ரூ.66 கோடி செலவில் உருவாக்கவும், ரூ.20 கோடி செலவில் வேம்பள்ளியில் ஒரு பட்டப்படிப்பு கல்லூரியையும் உருவாக்கவும் அரசு முடிவு செய்துள்ளது
good initiative
ReplyDelete