Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கிராமங்களில் தொற்று பரவலை தடுப்பது...:வழிகாட்டும் நெறிமுறைகள் அறிவிப்பு.

Tamil_News_large_276865020210516230431

கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா இரண்டாவது அலை, நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களை நோக்கி நகரத் துவங்கியுள்ளது. இதனால், அப்பகுதிகளில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.இதையடுத்து, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் கடைப் பிடிக்கப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதன் விபரம்:

* அனைத்து கிராமங்களிலும் கிராம சுகாதார கமிட்டி உதவியுடன், 'ஆஷா' எனப்படும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார பணியாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்

* கிராமங்களில் அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு, சமூக சுகாதார அதிகாரிகள், 'ஆன்லைன்' வாயிலாக மருத்துவ ஆலோசனைகள் வழங்க வேண்டும் இணை நோய்கள் மற்றும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளவர்களை சிகிச்சை மையங்களில் அனுமதிக்க வேண்டும்

* அனைத்து கிராமங்களிலும் தேவையான அளவு, 'பல்ஸ் ஆக்ஸிமீட்டர்' மற்றும் 'தெர்மாமீட்டர்' கருவிகள் கையிருப்பு இருக்க வேண்டும்

* வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்பவர்களுக்கு தேவையான மருந்துகளை வழங்குவ தோடு, உடல் நலம் குன்றினால், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் உள்ளிட்ட விபரங்களை கட்டாயம் அளிக்க வேண்டும்

* வீட்டு தனிமையில் உள்ளவர்கள், தொற்று அறிகுறி ஏற்பட்ட 10 நாட்களுக்கு பின், காய்ச்சல் இல்லையெனில், வீட்டு தனிமையை முடித்துக் கொள்ளலாம். அதன் பின், மீண்டும் கொரோனா பரிசோதனை தேவையில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாய் வறண்டு போவது கொரோனா அறிகுறியே!

கர்நாடகாவின் பெங்களூரு கொரோனா தடுப்பு பிரிவில் பணியாற்றும் டாக்டர் ஜி.பி.சத்துார் கூறியதாவது:நாக்கில் லேசான வலி, அரிப்பு அல்லது வாய் வறண்டு போவது ஆகியவை, கொரோனாவின் புதிய அறிகுறியாக கண்டறியப்பட்டுள்ளன. சமீபகாலமாக இந்த அறிகுறிகள் தென்படத் துவங்கி உள்ளன. காய்ச்சல் இல்லாவிட்டாலும், இது போன்ற அறிகுறியுடன் உடல் அசதி இருந்தால், நிச்சயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தவிர்த்திருக்கலாம்!

மத்திய அரசு உருவாக்கியுள்ள கொரோனா பணிக் குழுவின் தலைவரான டாக்டர் என்.கே. அரோரா கூறியுள்ளதாவது:அதிக உயிர் பலி ஏற்படுவதை தவிர்க்கவே, முன்களப் பணியாளர்கள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்க முடிவு செய்யப்பட்டது.நாடு முழுதும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தேவையான தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் உள்ளன. ஆனால், 18 - 44 வயதுக்கு உட்பட்டோருக்கும் தடுப்பூசி வழங்க எடுக்கப்பட்ட முடிவை தவிர்த்திருக்கலாம்.

அதனால் தான் தட்டுப்பாடு ஏற்பட்டது.வெளிநாடுகளிலேயே தடுப்பூசிகள் இல்லை. அதனால், உள்நாட்டில் தயாரிப்பை அதிகரிப்பதே ஒரே வழி. அடுத்த ஏழு மாதங்களில் தடுப்பூசிகளின் தயாரிப்பு அதிகரிக்கப்பட உள்ளது. வரும் டிச.,க்குள், 300 கோடி தடுப்பூசி 'டோஸ்'கள் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive