சென்னை: தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், கோடை விடுமுறை காலம் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளது.நாடு முழுதும் உள்ள பள்ளிகளில், மத்திய இடைநிலை கல்வி வாரிய மான சி.பி.எஸ்.இ., - இடைநிலை சான்றிதழ் கல்வி அமைப்பான ஐ.சி.எஸ்.இ., ஆகிய பாட திட்டங்களிலும் மற்றும் அந்தந்த மாநில பாட திட்டங்களிலும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பாட திட்டங்களில், ஏப்ரல் மாதம் புதிய கல்வி ஆண்டு துவங்கிவிட்டது. மாணவர்களுக்கு புதிய கல்வி ஆண்டுக்கான பாடங்கள் நடத்தப்படுகின்றன. சுற்றறிக்கைதமிழக பாட திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜூனில் தான் கல்வி ஆண்டு துவங்கும்.அதன்படி, இந்த ஆண்டு கொரோனா பிரச்னை இருந்தபோதும், தேர்தலுக்கு முன் பாடங்கள் முடிக்கப்பட்டு விட்டன.
மே 1 முதல் கோடை விடுமுறையை பள்ளி கல்வி இயக்குனரகம் அறிவித்தது. புதிய கல்வி ஆண்டுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள, மே மாத இறுதியில், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டியிருக்கும் என, அப்போது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோடை விடுமுறை காலம் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் புதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளது.கடந்த ஆண்டில், கொரோனா ஊரடங்கு அமலில் இருந்த போதும், ஜூன் 1 முதல் ஆன்லைன் வழி பாடங்களை நடத்த, பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி, ஆன்லைன் வகுப்புகள் துவங்கின.புதிய கல்வி ஆண்டு நாளை துவங்கும் நிலையில், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு, புதிய கல்வி ஆண்டு குறித்து, பள்ளிக்கல்வி இயக்குனரகம் எந்த தகவலையும் அனுப்பவில்லை என, ஆசிரியர்கள் தெரிவித்து உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...