Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் என்ன?

கொரோனா நோய் தொற்று காலத்தில் கருப்பு பூஞ்சை என்ற மற்றொரு நோய் மக்களை பயமுறுத்திவருகிறது.

கருப்பு பூஞ்சை நோய் என்றால் என்ன? அதனுடைய அறிகுறிகள் என்ன? யாருக்கெல்லாம் கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்? என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.


கருப்பு பூஞ்சை நோய் குறித்து யாரும் பயப்பட வேண்டாம்.
கருப்பு பூஞ்சை நோய் நீண்ட காலமாக நம் பூமியில் உள்ள நோயாகும்.
வீட்டில் காற்று புகாத பகுதிகளில் இந்த கருப்பு பூஞ்சை காணப்படும்.
கருப்பு பூஞ்சை நோய் எல்லோருக்கும் வராது.
பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்.
கருப்பு பூஞ்சை நோய் தாக்கினால் கண், மூக்கு, காது, தாடை பகுதிகளில் வலி, வீக்கம் காணப்படும். பல் வலி போல் தாடையில் வலி இருக்கும்.
ஒத்தை தலைவலி, மூக்கில் ரத்தம் வருவது கருப்பு பூஞ்சை நோய் தாக்கத்தின் அறிகுறிகளாகும்.
கருப்பு பூஞ்சை தாக்கிய பகுதியை பரிசோதனை செய்து பார்த்தால் அங்கு கருப்பு நிறத்தில் இந்த பூஞ்சைகள் காணப்படும். இதன்காரணமாக இந்நோய்க்கு கருப்பு பூஞ்சை என பெயரிடப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தாத சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் எளிதில் தாக்கும்.
ஸ்டீராய்டு மருந்துகளை அதிகளவு எடுத்துக்கொள்ளும் மூச்சு திணறல், நுரையீரல் பாதிப்பு, ஆர்த்ரைட்டிஸ் நோய் பாதிப்பு, சிறுநீரக போன்ற மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு கருப்பு பூஞ்சை எளிதில் தாக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் ‘immuno suppression’ மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்களுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கும்.
ஸ்டீராய்டு மருந்துகளை தொடர்ச்சியாகவோ அல்லது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துகொள்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதன்காரணமாக கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரிக்கும்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்களுக்கு மூச்சு திணறல் அதிகரிக்கும். மூச்சு திணறலை குறைக்க ஸ்டீராய்டு பயன்படுத்தப்படுகிறது. இதன்காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது.
கொரோனா சிகிச்சையின் போது எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய் அதிகளவு இருந்தால் கொரோனா சிகிச்சைக்கு பிறகு கருப்பு பூஞ்சை நோய் தாக்கும் அபாயம் உள்ளது.
கருப்பு பூஞ்சை நோய் படிப்படியாக கண் பார்வையை பாதிக்கும்.
கருப்பு பூஞ்சை அறிகுறி தென்பட்டவுடன் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்தால் நோயில் இருந்து மீண்டு விடலாம்
நீரிழிவு (சர்க்கரை ) நோய் உள்ளவர்களுக்கு இந்த நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
கருப்பு பூஞ்சை நோய் தாக்கிய பிறகு அதற்கு முறையாக சிகிச்சை எடுக்காவிட்டால் இந்நோய் மூளையை தாக்கும்.
கருப்பு பூஞ்சை நோய்க்கு ‘Amphotericin-B’ மருந்தை மத்திய சுகாதாரத் துறை பரிந்துரைச் செய்துள்ளது.
கருப்பு பூஞ்சை நோய் தாக்குதல் தொடக்கத்திலேயே சரி செய்துவிடமுடியும்.
கருப்பு பூஞ்சை நோய்க்கு முறையாக சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
Source: News7





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive