அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்கத்தை சேர்ந்தா இளம் அரசியல்வாதி மற்றும் திமுக கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஆவார்.
இவர்
2016 ல் திருவெரும்பூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு
திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பாரம்பரியமான அரசியல் குடும்பத்திலிருந்து வந்தவர். இவர் மறைந்த திமுக
எம்.எல்.ஏ அன்பில் பொய்யாமொழி மற்றும் திமுக முன்னாள் உறுப்பினர் அன்பில்
பி தர்மலிங்கத்தின் மகன் ஆவார். இவரது மாமா அன்பில் பெரியசாமியும் திமுக
கட்சியைச் சேர்ந்த தலைவர் ஆவார்.
தனிப்பட்ட வாழ்க்கை
முழுப் பெயர் : அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பிறந்த தேதி : 28 Mar 1983
பிறந்த இடம் : திருச்சி
கட்சி பெயர் : Dravida Munetra Kazhagam
கல்வி : MCA
தொழில் : அரசியல்வாதி
தந்தை பெயர் : அன்பில் பொய்யாமொழி
தாயார் பெயர் : மாலதி
துணைவர் பெயர் : ஜனனி
துணைவர் தொழில் : குடும்ப தலைவி
தொடர்பு :
நிரந்தர முகவரி :
பழைய எண் : 159 , புதிய எண் : 129 அன்பு நகர் , 9 வது குறுக்கு , கீரப்பட்டி , திருச்சி -620 012 .
பள்ளி கல்லூரிகள் திறக்கும் வரை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி கல்லூரிகளில் வேலை புரியும் ஆசிரியர்களின் ஊதியத்தை பாதியாக குறைத்து ஊதியம் இல்லாமல் கடந்த ஒன்றரை வருடங்களாக தவித்து வரும் தனியார் பள்ளி கல்லூரி பேராசிரியர்கள் ஆசிரியர்கள் ஓட்டுநர்கள் அவர்களுக்கு உதவ பள்ளிகல்வி துறை அமைச்சர் முன்வர வேண்டும்
ReplyDeletecorrect
Deleteதனியார் பள்ளி ஆசிரியர்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் தவிக்கிறார்கள் தயவுசெய்து இந்த அரசாவது இதனை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
ReplyDeleteதனியார் பள்ளிகள் அநியாயமாக கட்டணம் வசூல் செய்த போது இந்த ஆசிரியர்கள் நவதுவாரத்தையும் மூடிக் கொண்டு தானே இருந்தார்கள்
ReplyDeleteதனியார் பள்ளிகள் கட்டணத்தை வசூலித்து முழுவதையும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கொடுப்பதுபோல் உனது பதிவு உள்ளது வருடத்திற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அரசு ஆசிரியர்கள் வேலை செய்யாமல் ஒருவரிடம் சம்பளம் வாங்கிட்டாங்க அதை தட்டி கேட்க துப்பில்லை பாவம் அடிமையாக வேலை செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர்களை அவமானப் படுத்தாதே உன் குடும்பம் அழிந்து போய்விடும் கல்விக் கட்டணம் கட்டிய பெற்றோர்கள் தான் கல்விக் கட்டணம் இவ்வளவு அதிகமாக உள்ளது என்று கேள்வி கேட்கலாம் அரசாங்கத்திடம் பதில் சொல்லலாம் தொழிலாளி மாத ஊதியம் பெறுபவர் அங்கு எதையும் தட்டிக் கேட்க முடியாது வேலை இல்லையென்றால் சம்பளம் கேட்க முடியாது இதுதான் அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும் கட்டுப்படுத்த வேண்டியது அரசு
ReplyDeleteஅனுப்புநர்
ReplyDelete10த் & 12த் மாணவர்கள்.
பெறுநர்
பள்ளி கல்வி அமைச்சர்,
அன்பில் மகேஷ்.
ஐயா,
பொருள் : பொதுத்தேர்வு
வணக்கம். மே மாதம் 10 மற்றும் 12 க்கு பொதுத் தேர்வு நடைபெற இருக்கின்றது. ஆனால் பாடங்கள் இன்னும் முடியவில்லை. இன்னும் ஒரு மாதமே உள்ளது. இன்னும் நிறைய பாடங்கள் உள்ளதால் எங்களால் படிக்க முடியவில்லை.பாடங்கள் அனைத்தும் கடுமையாக உள்ளது.. நேரமும் மிக குறைவாக உள்ளது. ஆகையால், முதல் திருப்புதல் மற்றும் இரண்டாம் திருப்புதல் தேர்விறிகுரிய படங்களை மட்டும் பொதுத்தேர்வு பாடங்களாக அறிவிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்..
06/04/2022
இப்படிக்கு,
உங்கள் அன்பு 10th & 12th மாணவர்கள்
இந்த கடிதத்தை அன்பில் மகேஷ் ஐயா பார்க்கும் வரை பகிரவும்...🙏🙏
ஐயா வணக்கம். தனியார் பள்ளிகள் மிக அதிக கட்டணம் வசூல் செய்து வருகிறார்கள். அருள் கூர்ந்து கவனித்து தக்க நடவடிக்கை எடுக்கனும். எங்கள் ஊரில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர்களிடம் ஒழுக்கம் இல்லை
ReplyDelete15 ஆண்டுகளுக்கு மேல் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் மாற்றுதிறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும்'மாற்றுதிறன் கொண்ட சிறப்பாசிரியர்களுக்கு சிறப்பு போக்குவரத்து பயணப்படி இன்னும் வழங்கபடவில்லை(TA Allowance ) பணிநிரந்தரமும் வழங்கவில்லை... மாற்றுதிறனாளிகளுக்காக போடும் திட்டம் எதுவும் செயல்படவில்லை
ReplyDelete15 ஆண்டுகளுக்கு மேல் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் மாற்றுதிறன் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும்'மாற்றுதிறன் கொண்ட சிறப்பாசிரியர்களுக்கு சிறப்பு போக்குவரத்து பயணப்படி இன்னும் வழங்கபடவில்லை(TA-Allowance ) பணிநிரந்தரமும் வழங்கவில்லை... மாற்றுதிறனாளிகளுக்காக போடும் திட்டம் எதுவும் செயல்படவில்லை...
ReplyDeleteஅனுப்புநர்
ReplyDeleteமாணவ மாணவிகளின் நலம் விரும்பி
பெறுநர்
பள்ளி கல்வி அமைச்சர்
அன்பில் மகேஷ்
ஐயா வணக்கம் அரசு பள்ளிகளில் நன்கு படிக்கின்ற குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் ஆனால் சுமாராக படிக்கும் பிள்ளைங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை அவர்களின் மற்ற திறமைகளை கண்டுகொள்வதில்லை. பள்ளியின் எந்த ஒரு கலை நிகழ்ச்சிகளில் சேர்ப்பதில்லை போட்டிகளில் கலந்துகொள்ளவிடுவதில்லை.அவர்கள் கலந்து கொண்டாலும் உனக்கு ஒன்றும் தெரியாது என்று அவர்களை உதாசீனம் செய்து விடுகிறார்கள் . அப்படி என்றால் அரசு பள்ளிகளை நம்பி. இருக்கும் சுமாராக படிக்கும் பிள்ளைகளின் நிலைமை என்னவாகும் அதை கருத்தில் கொண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் ஐயா அவர்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
இப்படிக்கு
மாணவ மாணவியர்
நலம் விருப்பம் சமூக ஆர்வலர்