சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கார்மேகம் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் திரு கணேசமூர்த்தி,ஆர்.டி.ஓ.திரு.சரவணன் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் அரசுப் பள்ளிகளை சேர்ந்த சேவை அமைப்பான ஜூனியர் ரெட் கிராஸ் இயக்கத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களை தன்னார்வலராக இணைத்து வருவாய்த்துறை, காவல் துறையினரோடு குழுவாக பிரிக்கப்பட்டு கொரானா தடுப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்குழுவானது தடுப்பூசி மையங்களில் கொரானா தடுப்பு முறைகளை கடைபிடிக்கச்செய்வது, கடைகள் முழுமையாக மூடப்பட்டனவா, தேவையில்லாமல் மக்கள் நடமாட்டம், காய்கறி வண்டிகளின் பணிகள், வீட்டிலேயே தனிமைப்படுத்த ருக்கு மருத்துவ உதவிகள் உணவு பொருட்கள் முறையாக கிடைக்கின்றனவா என அந்தந்த முன் களப்பணியாளர்கள் மூலம் செய்து கண்காணிக்கவும் அந்தந்தப் பகுதியில் பாதிக்கப்பட்ட ஒருவரது விவரங்கள் மற்றும் இறந்தவர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்பணிகளை மாவட்ட ஜே.ஆர்.சி.கன்வீனர் பிரபாகர் தலைமையில் 40 மேற்பட்ட அரசுப்பள்ளியைச்சேர்ந்த ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.இவர்களின் பணியினை மாவட்டக்கல்வி அலுவலர்கள் திரு.உதயகுமார்,திருமதி.சுமதி,திரு.கணேசன் ஆகியோர் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...