பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதார நிறுவனத்தின் அவசரகால பயன்பாடு பட்டியலில் இடம்பெறாததால் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை மட்டுமே தங்களது நாட்டுக்குள் அனுமதிப்பது என்ற விதிமுறையை உலகின் பல்வேறு நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன. சர்வதேச பயண விதிகளின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பு பட்டியலில் இடம்பெறாத தடுப்பூசியை செலுத்திக்கொண்டவர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவராகவே கருதப்படுவார்.இதனால் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடு பயணம் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம் உலக சுகாதார அமைப்பு மையத்தின் அவசரகால பயன்பாட்டிற்கான பட்டியலில் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் இன்னும் இடம்பெறவில்லை.
கோவிஷீல்டு, மாடெர்னா, பைசெர், ஜான்சன், சைடோபார்ம் ஆகிய தடுப்பூசிகள் மட்டுமே WHO-வின் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளன.இதனால் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.பட்டியலில் கோவக்சினை இடம்பெற செய்யக்கோரி பாரத் பயோடெக் ஏற்கனவே உலக சுகாதார அமைப்புக்கு விண்ணப்பித்து இருக்கிறது. ஆனால் கூடுதல் விவரங்கள் தேவை என்று கூறியுள்ள உலக சுகாதார நிறுவனம் இதுகுறித்து பாரத் பயோடெக் நிறுவன நிர்வாகிகளிடம் பேசிய பிறகு முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...