கொரோனா பாதிப்பை கருத்தில்
வைத்து, மத்திய அரசு அலுவலகங்களில், அதிகாரிகள் மற்றும் பணியாளர் வருகையை
ஒழுங்குபடுத்த வேண்டும்' என, துறை செயலர்களுக்கு, தொழிலாளர் நல அமைச்சகம்
உத்தரவிட்டு உள்ளது.
மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு:கொரோனா பரவல் அதிகரிப்பால், மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுவோர் வருகையை ஒழுங்கு படுத்தும் பணிகளை, துறை செயலர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணியர், அலுவலகம் வரத் தேவையில்லை; வீடுகளில் இருந்து பணியாற்றலாம்.
அலுவலகங்களில், அதிக எண்ணிக்கையில் பணியாளர்கள் கூடுவதை தவிர்க்க, நேர வாரியாக பணி ஒதுக்கீடு மேற்கொள்ளலாம்.கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் அதிகாரிகள் உட்பட அனைவரும், அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப் படுகிறது.அவர்கள் அனைவரும்,வீடுகளில் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக பணிகளை தொடரலாம். தொலைபேசி மற்றும் ஆன்லைன் தொடர்புகளை, முறையாக பராமரிக்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...