தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லாததால், அவர்களுக்கு நிவாரண தொகை வழங்க, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்ட கலெக்டர்களுக்கு, தமிழக தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தினர் அனுப்பிஉள்ள கடிதம்:
பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதித்துள்ளது. பலர் மாற்றுப்பணி தேடி அலையும் நிலை உள்ளது. குடும்ப செலவுகளுக்கே தடுமாறுகின்றனர். ஓர் ஆண்டாக ஊதியம் இல்லாமல் தவிக்கின்றனர்.
எனவே, ஊதியம் இன்றி தவிக்கும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, நிவாரண தொகை வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், கல்வி தகுதி, அனுபவம் அடிப்படையில், ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகள் தரப்பில் பிடித்தம் செய்யப்பட்ட ஊதிய தொகையை, ஆசிரியர்களுக்கு தாமதமின்றி வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி என்னும் முன்னாள் முதல்வரும் ஸ்டாலின் என்னும் தற்போதைய முதல்வரும் கண்டுகொள்ளாமல் விட்ட பரிதாபத்திற்குரிய நபர்கள் யார் என்றால் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களும் தனியார் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மட்டுமே கோடி கோடியாக சம்பாதித்த முதலாளிகள் இந்த இக்கட்டான நிலையில் இரண்டாயிரம் மூவாயிரம் ரூபாய் கூட கொடுக்க முடியாத அளவிற்கு கல்நெஞ்சம் பிடித்த நபர்களாக அந்த ஊழியர்களின் முன் தோன்றுகிறார்கள் மேலும் அவர்களின் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு எந்தவித ஊதியமும் கொடுக்காமல் ஒரு வருட காலமாக இழுத்தடித்து வருகிறார்கள் ஸ்டாலின் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பார்களா
ReplyDeleteமுன்னாள் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் மாவட்டமாக ஈரோடு குறிப்பாக சத்தியமங்கலம் தாலுகாவில் உள்ள பள்ளிகளில் ஒரு சில பள்ளிகளை தவிர மற்ற அனைத்து பள்ளிகளிலும் அரசு விதிமுறைகளை மீறி ஆசிரியர்களின் சான்றிதழ்களை வைத்துக்கொண்டு ஊதியம் கொடுக்காமல் கொத்தடிமையாக நடத்தும் அவலம் குறிப்பாக புஞ்சைபுளியம்பட்டி மற்றும் சத்தியமங்கலம் கோபி சுற்றுவட்டார பள்ளிகள் பள்ளிகளின் விவரம் வி கே சி வேட்டுவ கவுண்டர் எஸ் ஆர் சி செட்டியார் அம்மா முதலியார் சாணக்கியா சேட் சாரு டாக்டர் ராகவேந்திரா இந்த பள்ளிகளில் மிகவும் கொத்தடிமையாக நடத்தி வருவதாக அந்தப் பள்ளி ஆசிரியர்கள் மிகவும் புலம்புகிறார்கள் அதிலும் குறிப்பாக இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சரிடம் பதில் கொடுத்தும் எதுவும் நடக்கவில்லை எனவே அன்பில் மகேஷ் பொய்யாமொழி இந்தப் பள்ளிகளில் உடனடியாக ஆய்வு செய்து ஆசிரியர்களின் ஒரிஜினல் சான்றிதழ்களை வாங்கி கொடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் இல் மேலும் கடந்த ஒரு வருட காலமாக அவர்களது சான்றிதழை வைத்ததற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அந்த நிர்வாகத்திடம் இருந்து வசூலித்து அந்த ஆசிரியர்களிடம் கொடுக்கும்படி மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அல்லது அரசாங்கம் உதவி புரிய வேண்டும்
ReplyDelete