Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ்!

''தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க முதல்வர் நல்ல முடிவு எடுப்பார்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கொரோனாவால் 5 லட்சம் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிலர், கூலி வேலைக்கு செல்வதாக கேள்விப்பட்டு, மனவேதனை அடைந்தேன்.இது குறித்து முதல்வரிடம் பேசியுள்ளேன். தனியார் பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை காக்க, முதல்வர் நல்லதொரு முடிவை எடுப்பார். தமிழகத்தில் நீட் தேர்வை, எந்த நேரத்திலும் அனுமதிக்க மாட்டோம்.சட்டசபை கூடும் நேரத்தில், அதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். எந்தவித அவசரமும் இல்லாமல், மாணவர்களுக்கு அவகாசம் வழங்கிய பின்னரே, பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

IMG-20210531-WA0004




1 Comments:

  1. Please take some necessary steps for private school teachers sir. They are not getting the salary for the past one year. They struggling a lot with financial problem.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive