உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் கூறியதாவது:
கடந்த ஜனவரியில் தமிழகத்தில் 35 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை, அரசு உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தியது. அந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக ஊதியம் வழங்க ஆணை பிறப்பிக்காததால் மாத ஊதியம் பெறாமல் தவிக்கின்றனர்.
பிப்ரவரியில் வருமான வரி பிடித்தம் செய்ததாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக தேர்தலை காரணம் காட்டி நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டனர்.
தேர்தல் முடிந்த பின்பும் ஊதியம் வழங்க ஆணை பிறப்பிக்கவில்லை. ஊதியத்தை நம்பியே ஆசிரியர்கள் இருப்பதால் குடும்ப மற்றும் மருத்துவ செலவுக்கு வழியின்றி தவிக்கின்றனர். தமிழக முதல்வர் ஊதிய பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...