பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக சந்தேகம் கேட்ட மாணவிக்கு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பிளஸ் 2 தேர்வு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நிலவிவருகிறது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவி ஒருவர் பொதுத்தேர்வு தொடர்பான சந்தேகங்களை அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் தெரிவிக்கும் குரல் பதிவு (ஆடியோ) சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.
அதில், ``பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறுமா? எனில் எப்போது நடைபெறும்? நீட், ஜேஇஇ உட்பட போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டியுள்ளதால், தேர்வு பற்றிய முடிவை விரைந்து அறிவிக்க வேண்டும்'' என்று மாணவி கேள்விகளை முன்வைக்கிறார்.
அதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளித்துப் பேசும்போது, ``மத்திய அரசு என்ன நிலைப்பாடு எடுக்கிறது என்பதைப் பார்த்த பின்னர், முதல்வருடன் கலந்து ஆலோசித்துதான் இதில் முடிவு எடுக்க முடியும். உயர் கல்விக்கு பிளஸ் 2 மதிப்பெண் முக்கியம் என்பதால் தேர்வு ரத்து செய்யப்படாது. கரோனா பரவல் குறைந்தபின் தேர்வு கட்டாயம் நடத்தப்படும்'' என்றார்.
மாணவியின் அழைப்பை ஏற்று, அவருக்கு அமைச்சர் பதில் வழங்கியதற்கு, சமூக வலைதளங்களில் வரவேற்புக் கிடைத்துள்ளது
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...