புதுடில்லி:''பிளஸ் 2 வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவது குறித்து, மாநிலங்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. அனைவரும் இணைந்து கூட்டாக, உறுதியான முடிவை, ஜூன், 1ம் தேதிக்குள் எடுப்போம்,'' என, மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
மாநில அமைச்சர்கள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளதாவது:'கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக உள்ளதால், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்' என, ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதே நேரத்தில், 'மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் வைத்து, பிளஸ் 2 தேர்வுகளை நடத்த வேண்டும்' என, மற்றொரு தரப்பினர் சொல்கின்றனர்.
மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்களின் பாதுகாப்பு, உடல்நிலை எங்களுக்கு முக்கியம். அதனால், தேர்வுகளை நடத்துவது குறித்து, இரண்டு மாற்று வழிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஒன்று, முக்கிய பாடங்களுக்கு மட்டும் தேர்வு நடத்தி, அதனடிப்படையில், மற்ற பாடங்களுக்கு மதிப்பெண் வழங்குவது. இரண்டாவது, தேர்வு நேரத்தை குறைத்து, விடைகளை தேர்ந்தெடுக்கும் முறையில், தேர்வை நடத்துவது. மாநில அரசுகள் தங்கள் பரிந்துரைகளை, நாளைக்குள் வழங்கும்படி அறிவுறுத்தி உள்ளோம்.
தமிழகம் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்கள், பாதுகாப்பான முறையில் தேர்வுகளை நடத்த வேண்டும் என, கூறியுள்ளன. மாநில அரசுகள் பரிந்துரை கிடைத்ததும், அனைவரும் இணைந்து உறுதியான கூட்டு முடிவை, ஜூன் 1ம் தேதிக்குள் எடுப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Online la exam nadathunga sir.
ReplyDeleteless possibility bro ... because remote areas la irukura students ku network trouble irukum
Deleteetho pannunga ana seekrm mudiva sollunga ... thanga mudila engalala evlo naltha ore book ah padikurathu
ReplyDelete