அக்ஷ்ய திருதியை அல்லது அக்ஷய தீஜ் என்ற விழா இந்து மற்றும் சமணர்களுக்கு புனித நாளாக கருதப்படுகிறது. இந்த அற்புத நாள் தமிழ் மாதமான சித்திரை மாதத்தில் வளர்பிறை திருதியை திதியில் வரக்கூடியது. அதாவது சித்திரை அமாவாசை தினத்திற்கு மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது.
புராணத்தின் படி பிரம்மனால் தோற்றுவிக்கப்பட்ட கிருதயுகத்தில் முதல் நாள் அட்சய திருதியை ஆகும்.
சமஸ்கிருதத்தில் அக்ஷயா என்ற சொல்லுக்கு முடிவில்லாத அல்லது என்றென்றும் நீடிக்கக்கூடியது என்று குறிக்கிறது, எனவே அக்ஷய திரிதியா நன்னாள் அதிர்ஷ்டத்தைத் தருவதாக நம்பப்படுகிறது.
இந்த அற்புத நாளில் புதிய தொழில் தொடங்குதல், புதிய வேலையில் சேருதல், புதிய கடை ஆரம்பித்தல் போன்ற செயல்களை செய்வதால், நம் தொழில் நல்ல வளர்ச்சியைத் தரும். மேலும் இந்த நாளில் நம் முன்னோர்களுக்கும், பெற்றோரையும் வணங்கி மரியாதை செலுத்துவது உகந்தது.
அக்ஷய திரிதியை2021 தேதி மற்றும் பூஜைக்கான நேரம்
அக்ஷய திரிதியை சித்திரை வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை திதியில் வருகிறது. 2021 மே 14ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்றைய நாள் முழுவதும் திருதியை திதி இருக்கிறது. அன்றைய தினம் வரக்கூடிய முகூர்த்த நேரமான காலை 9 மணி முதல் 10.30 மணி வரை வீட்டில் பூஜை செய்ய மிகவும் சிறப்பான நேரமாகும்.
அட்சய திரிதியை திதி முக்கியத்துவம்:
அட்சய திரிதியை காக்கும் கடவுள் மகா விஷ்ணு மற்றும் மகா லட்சுமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாள். இந்து புராணப்படி திரேதாயுகம் தொடங்கியது அட்சய திரிதியை நாளில் தான்.
இந்த நாளில் தான் மகாவிஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் அவதாரம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது
கட்டாயம் தங்கம் வாங்க வேண்டுமா ?
இந்த அற்புத நாளில் தங்கம் வாங்க வேண்டும் என்ற மன நிலையை அனைவரிடமும் தற்போதுள்ள வர்த்தக சூழல் விதைத்துவிட்டது.
பொதுவாக அட்சய திரிதியை தினத்தில் செய்யக்கூடிய நல்ல விஷயங்களும், நல்ல பொருட்களும் பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம்.
அதன் காரணமாக தங்கத்தைத் தவிர மற்ற மங்களப் பொருட்களை வாங்கும் எண்ணம் சற்றே குறைந்து போய்விட்டது. இந்த அற்புத நாளில் தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதைத் தவிர மற்ற மங்களைப் பொருட்களை வாங்கலாம்.
இந்த நாளில் நம்மால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவி செய்வதும், குறிப்பாக அன்னதானம் செய்வதால், ஏழை, எளியோருக்கு வேண்டிய தானியங்கள், பொருட்களை வாங்கித் தருவதால் நமக்கான புண்ணியங்கள் அதிகரிக்கும்

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...