Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC Press release relating to downloading of Answer script for the post of Group-1 Examination

IMG_20210421_123448

தேர்வாணையம் தனது தேர்வு முறைகளில் முற்போக்கான பல மாற்றங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது , கடந்த 07.02.2020 மற்றும் 15.02.2020 நாளிட்ட செய்தி வெளியீட்டு எண்களான 08/2020 மற்றும் 13/2020 இல் தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் வகையில் பின்வரும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன :

1. ஆதார் எண் குறித்த விவரங்களை OTR கணக்குடன் இணைத்தல்.


2. தேர்வர்களின் மெய்த்தன்மை உறுதி செய்ய தேர்வு நேரங்களில் மாற்றம் செய்தல்.


3. தேர்வர்களுக்கு வழங்கப்படும் OMR கொள்குறிவகை விடைத்தாளில் பெருவிரல் ரேகை பதித்தல்.


4. அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர் கட்டாயம் விடையளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தல்.


5. தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்காக தெரிவு செய்யும் இரண்டு மாவட்டங்களில் ஏதேனும் ஒன்றினை தேர்வு மையமாக ஒதுக்குதல்.


6. தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாட்களை பாதுகாப்பான முறையில் தேர்வாணைய அலுவலகத்திற்கு எடுத்து வருவதற்கு அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பாதுகாப்பினை செயல்படுத்துதல் . 

7. தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் நிறைவடைந்த பின் தேர்வர்களின் விடைத்தாள் நகல்களை இணையதளம் மூலமாக உரிய கட்டணத்தை செலுத்தி உடனடியாக பெற்றுக் கொள்ளுதல் . தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மேற்கூறிய மாற்றங்களில் வரிசை எண் 1 முதல் 6 வரை கூறப்பட்டவை செயல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளன . மேலும் , வரிசை எண் 7 இல் கூறப்பட்டுள்ள மாற்றம் தற்போது நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

அதனை செயல்படுத்தும் வகையில் முதற்கட்டமாக , 03.03.2019 அன்று நடைபெற்ற ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - 1 அதாவது தொகுதி 1 ல் அடங்கிய பதவிகளுக்கான முதனிலைத் தேர்வு மற்றும் அதே பதவிகளுக்கான 12.07.2019 , 13.07.2019 மற்றும் 14.07.2019 ஆகிய தினங்களில் நடைபெற்ற முதன்மைத் தேர்வுக்கான விடைத்தாட்கள் 21.04.2021 அன்று தேர்வாணயத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது . இணையதளத்தில் தேர்வர்களின் விடைத்தாட்களை பதிவேற்றம் செய்வது தேர்வாணைய வரலாற்றில் இதுவே முதல் முறையாகும் . எனவே இவ்வாய்ப்பினை தேர்வர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இத்தேர்வினை எழுதிய விண்ணப்பதாரர்கள் அவரவர் OTR கணக்கு மூலமாக உரிய கட்டணத்தை செலுத்தி அவரவர் விடைத்தாட்களை உடனுக்குடன் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . மேற்படி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு அதாவது தொகுதி 1 ல் அடங்கிய பதவிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனைத்து விவரங்கள் அடங்கிய தெரிவுப் பட்டியல் அவர்களுடைய புகைப்படங்களுடன் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது . விண்ணப்பதாரர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது . மேலும் , 01.01.2020 க்கு பிறகு தெரிவு நடவடிக்கைகள் முற்றிலும் நிறைவடைந்துள்ள தேர்வுகளின் விடைத்தாட்கள் இணையதளத்தில் படிப்படியாக விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive