* தமிழகத்தில் வரும் 20ஆம் தேதி முதல் இரவு நேரம் ( 10 மணி முதல் 4 மணி வரை) ஊரடங்கு அறிவிப்பு.
* ஞாயிறு முழு ஊரடங்கு அமல்
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அத்தியாவசிய பணிகள், மருத்துவம், ஊடகம் மாதிரியான துறையினருக்கும் இந்த ஊரடங்கு பொருந்தாது என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமல்லாது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வரும் 20-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இரவுநேர ஊரடங்கின்போது போக்குவரத்துக்கு தடை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நாட்களில் உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி எனவும் அரசு தெரிவித்துள்ளது. இரவு 9 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...