அமெரிக்க
நாட்டின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா பூமியில் உள்ள நிலம், நீர், காற்று
மற்றும் பனி என அதன் அமைப்பை விண்வெளியில் இருந்து அழகாக படம் பிடித்து
அதன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த படங்கள் ஒவ்வொன்றும்
‘அதிசயம், அற்புதம்’ என சொல்லும் அளவிற்கு உள்ளது. இதனை இணையவாசிகள்
கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
“இந்த அதிர்ச்சியூட்டும் படங்களில் இயற்கை அமைப்புகளான நிலம், நீர், காற்று, பனி ஒன்றுக்கொன்று பிணைந்துள்ளன. நாம் நிலத்தில் இருந்தாலும், விண்வெளியில் இருந்தாலும் சரி இந்த நீல நிற கிரகத்தால் நாம் என்றென்றும் ஒன்றுபட்டுள்ளோம். அது கொண்டாடப்பட வேண்டிய ஒன்று” என அந்த படங்களுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளது நாசா.
Super nasa
ReplyDelete