பிளஸ் 2 செய்முறை தேர்வுகள்
முடிந்துள்ள நிலையில், ஆசிரியர்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணி
வழங்க, பள்ளிக்கல்வி துறை ஆலோசித்து வருகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, அனைத்து பாடங்களுக்கான செய்முறை தேர்வுகள் நேற்றுடன் முடிந்தன. இதையடுத்து, மாணவ - மாணவியருக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இனி தேர்வு நாளில் வந்தால்போதும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆறு மாதங்களுக்கு மேல் விடுப்பு அறிவிக்கப் பட்டாலும், வழக்கமான மாத ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அவர்களுக்கு கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி விழிப்புணர்வு தொடர்பான, அரசின் திட்ட பணிகள் வழங்கலாமா என்பது குறித்து, நிதித்துறையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.இது குறித்து, சுகாதார துறையுடன் பேசி, விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
தயவு செய்து அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விருப்பமுள்ள ஆசிரியர்களை உடனே பணியமர்த்தவும்...சில தரங்கெட்ட,மனிதாபிமானமற்ற மனிதர்களின் இழிசொற்களிலிருந்து நாங்கள் தப்பிப்போம்..
ReplyDelete