வருமான
வரி வழக்குகளை விரைந்து தீர்ப்பதற்கான, 'விவாத் சி விஸ்வாஸ்' திட்டம்,
ஜூன், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான
வரி மதிப்பீடு, அபராதம், வட்டி ஆகியவை தொடர்பான பிரச்னைகளுக்கு சுமுக
தீர்வு காண, 'விவாத் சி விஸ்வாஸ்' எனப்படும், சலுகை திட்டத்தை
அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தில், மதிப்பீடு செய்யப்பட்ட வருமான வரியை செலுத்துவோருக்கு அபராதம், வட்டி, காலதாமத கட்டணம் ஆகியவை தள்ளுபடி செய்யப்படும். நீதிமன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட மாட்டாது. அதனால், இந்த திட்டம், வருமான வரி செலுத்துவோரிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
ஏராளமான வழக்குகளுக்கு துறை ரீதியாக தீர்வு காணப்பட்டுள்ளது. இதுவரை, இத்திட்டத்தில், 54 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இம்மாதம், 30ம் தேதியுடன் முடிவடைய இருந்த இத்திட்டத்தை, கொரோனா காரணமாக, நீட்டிக்கக் கோரி, வரி செலுத்துவோர், வரி ஆலோசகர்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்திருந்தனர். அதை ஏற்று, ஜூன், 30ம் தேதி வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...