சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் மத்திய நெகிழிப் பொறியியல், தொழில் நுட்ப நிறுவனத்தில் (சிப்பெட்) இளநிலை, முதுநிலை, பட்டயம், மேம்பட்ட பட்டயம், முதுநிலைப் பட்டயப் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிறுவனம் இந்திய அரசின் ரசாயனங்கள்- உரங்கள் அமைச்சகத்தின் ரசாயனம் மற்றும் பெட்ரோலிய ரசாயனங்கள் துறையின்கீழ் செயல்பட்டுவருகிறது.
இந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டு கால அளவிலான நெகிழித் தொழில்நுட்பம் , நெகிழி வாா்ப்புருத் தொழில்நுட்பம் ஆகிய இரு பட்டப் படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பில் தோச்சி பெற்றவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் பதிவு இணையதள முகவரியில் கடந்த ஏப். 13-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. ஜூலை 3-ஆவது வாரத்துக்குள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க வேண்டும். பின்னா் மாணவா் சோக்கைக்கான சிப்பெட் தோவு ஜூலை இறுதி வாரத்தில் நடைபெறும். இதைத் தொடா்ந்து, வகுப்புகள் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் தொடங்கும்.
இவற்றை படித்தவா்களுக்கு முன்னணி பிளாஸ்டிக் தொழில் நிறுவனங்களில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதால், இந்தப் படிப்புகள் குறித்து மாணவா்களுக்குத் தெரியப்படுத்தி, விருப்பமுள்ள மாணவா்களை சேருவதற்கு ஊக்குவிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளாா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...