தமிழகத்தில்
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம்
அதிகரித்து வருகிறது. 2 ஆயிரம், 3 ஆயிரம் என இருந்த
புதிய தொற்றின் எண்ணிக்கை தற்போது 4 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இதனால்
நாளையில் இருந்து புதிய கட்டுப்பாடுகளை
தமிழக அரசு அறிவித்துள்ளது. இது
பலன் அளிக்கவில்லை என்றால் இரவு நேர
ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு
எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், வெளிமாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் வருபவர்களுக்கு நாளை முதல் இ-பாஸ் கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கன்னியாகுமரி சுற்றுத்தலம் என்பதால் வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருதை தருவார்கள் என்பதால் ஆட்சியர் இந்த எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...