நாட்டில் இதுவரை 14 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கரோனா தொற்றுக்கு எதிரான உலகின் மாபெரும் தடுப்பூசி போடும் திட்டத்தின் கீழ்,
இதுவரை 14 கோடிக்கும் அதிகமான தடுப்பூசியை செலுத்தி இந்தியா குறிப்பிடத்தக்க சாதனையை படைத்துள்ளது.
உலகளவில் மிக விரைவாக, வெறும் 99 நாள்களிலேயே இந்தியா இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது.
இன்று காலை 7 மணி வரை, 20,19,263 முகாம்களில் 14,09,16,417 பயனாளிகளுக்கு, கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 25 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
99-வது நாளான நேற்று (ஏப்ரல் 24, 2021), நாடு முழுவதும் 25,36,612 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...