முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி, தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சார்பில் போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு, ஜூன், 26, 27ல் நடத்தப்பட உள்ளது. இதற்கு, நேற்று துவங்குவதாக இருந்த, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, டி.ஆர்.பி., வெளியிட்ட செய்திக்குறிப்பு
:முதுநிலை ஆசிரியர், கணினி பயிற்றுனர்தரநிலை~ ~ 1, உடற்கல்வி இயக்குனர் நிலை ~ ~1 ஆகிய பதவிகளுக்கு, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வின் ஆன்லைன் விண்ணப்பம் துவங்க, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால், விண்ணப்ப தேதி தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Ohh
ReplyDeleteதமிழகத்தில் 12000 பட்டதாாி ஆசிரியர்கள் 92 முதுகலை ஆசிரியர்கள் உபரி என்று அறிக்கை உள்ளது. உயா்நீதி மன்ற சென்னை கிளை - இந்த ஆசிரியர்களை தமிழ்நாடு முழுவதும் ஒரே அலகாகக் கொண்டு பணி நிரவல் செய்ய வேண்டும். அதுவரை புதிய நியமனங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த பிரச்சனையை அரசு பரணில் கட்டி வைத்து விட்டது.உபரி ஆசிரியா்கள் பெரும்பாலும் சிறுபான்மையினா் நடத்தும் பள்ளிகளில் உள்ளார்கள்.எனவே தொடை நடுங்கி அரசு இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாது.ஆனால் இந்து மேலாண்மை பள்ளிகளிலும் புதிய நியமனங்கள் செய்ய முடியாத நிலை உள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்கள் தெரிந்தவர்கள் பதிவிடலாம். பய்னுள்ளதாக இருக்கும்.
ReplyDelete