தமிழகத்தில் தற்சமயம் கொரோனா இரண்டாம் அலை வீசி வருவதால் , அரசு அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தியுள்ளதால் , தற்போது உயர் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாலும் , மேலும் தேர்வுகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாலும் , ஆணையத்தின் சார்பாக கீழ்கண்ட நெறிமுறைகள் கண்டிப்பாக ஒவ்வொரு பள்ளியிலும் பின்பற்றி நடைமுறைப்படுத்த வேண்டும் என இதன் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1. அரசாங்கத்தினுடைய வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளி இடப்பட்டு கண்டிப்பாக குழந்தைகளை அமர வைக்க வேண்டும் . அதிகமான எண்ணிக்கையில் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அதற்கான சூழ்நிலைக்கேற்ப மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
2. அனைத்து குழந்தைகளும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
3. பள்ளிகளில் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் கண்டிப்பாக வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
4. கை சுத்திகரிப்பான் ( சானிடைசர் ) கண்டிப்பாக இருக்க வேண்டும் . ஒவ்வொரு வகுப்பு அறையிலும் கை சுத்திகரிப்பான் இருக்க வேண்டும் . கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் . குழந்தைகள் கைகளை சுத்தமாக வைத்திருப்பதை ஆசிரியர்கள் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.
5. வகுப்பு அறைகளுக்குள் வகுப்பு ஆசிரியர்கள் , உள்ளே நுழையும் போதும் , வெளியே வரும் போதும் குழந்தைகள் ஒருவரை ஒருவர் முட்டி மோதிக்கொண்டு வெளியே வருவதை தவிர்த்து , சமூக இடைவேளியுடன் செல்வதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
6. அதே போல் , விளையாட்டுத் திடலிலும் குழந்தைகள் தக்க பாதுகாப்புடன் விளையாட உடற்கல்வி ஆசிரியர் உடன் இருந்து அதை கண்காணித்து குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.
7. அரசு பள்ளி வாகனங்களில் வந்து செல்லும் போது வாகனங்களில் கைசுத்திகரிப்பான் வைத்திருக்க வேண்டும் . ஓட்டுநர் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் . அதே போல் ஓட்டுநரும் கைசுத்திகரிப்பான் மற்றும் சமூக இடைவெளியுடன் வாகனங்களில் இருக்க வேண்டும்.
8. முடிந்தவரை மதிய உணவு உட்கொள்ளும்போது குழந்தைகள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து சற்றே இடைவெளிவிட்டு தனித்தனியாக அமர்ந்து உணவு உட்கொள்வதை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.
9. மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தால் அதற்கு ஏற்றார்போல் மதிய உணவிற்கான நேரங்களை மாற்றி அமைத்து , இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி பின்பற்றுவதை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும்.
10. ஒவ்வொரு பள்ளியிலும் குழந்தைகள் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட விபர அட்டைகள் வைத்திருக்க வேண்டும்.
11. கழிவறைக்கு செல்லும் போதும் , வரும்போது இந்த வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
12. வகுப்பு அறை ஜன்னல் கம்பிகள் , கதவுகள் உள்ளிட்ட அனைத்து பொருட்கள் மற்றும் இடங்களில் கிருமிநாசினியை தேவைப்படக்கூடிய குறிப்பிட்ட இடைவெளியில் தினந்தோறும் தெளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
13. ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களுக்கு தெளிவாக தெரியும் வண்ணம் கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் அவசர காலத்திற்கான தொலைபேசி எண்கள் அடங்கிய பதாகைகள் அல்லது விபர அட்டைகள் தொங்கவிட வேண்டும்.
14. ஆசிரியர்கள் இந்த வழிமுறைகளை பின்பற்றுவது மாணவர்களுக்கு ஒரு முன்உதாரனமாக இருக்க வேண்டும்.
மேற்கூறிய நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் . ஆணையத் தலைவர் , உறுப்பினர்கள் மற்றும் ஆணையம் சார்ந்த அலுவலர்கள் அவ்வபோது பல்வேறு இடங்களுக்கு சென்று பள்ளிகளை திடீர் ஆய்வு மேற்கொள்ள இருப்பதால் கண்டிப்பாக மேற்கூறிய நடைமுறைகளை தவறாது கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...