''தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சிறப்பு ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார்.
தேனியில் நடந்த இச்சங்க மாநில சிறப்பு செயற்குழு கூட்டத்தில் அவர் கூறியதாவது:பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம். தபால் ஓட்டுகள் சென்றடைவதில் சிரமம் உள்ளது. எனவே தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பணி ஆணை வழங்கும் இடத்தில் சிறப்பு ஓட்டுச்சாவடி அமைக்க வேண்டும். தேர்தல் பணியில் ஆசிரியர்கள் மரணம், பாதிப்பு ஏற்பட்டால் அவரது குடும்பத்திற்கு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும்.ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி ஒரு வட்டாரத்தில் இருந்து மற்றொரு வட்டாரத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும்.
தொடக்க கல்வி துறையில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பிற்கு முன் இத்தீர்ப்பு வழங்கியதால் இதற்கு தமிழக அரசு அரசாணை வழங்க வேண்டும், என்றார். மாவட்ட செயலாளர் சந்திரன் உடனிருந்தார்.
உயர்நிலை மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடுநிலை பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க ஒத்துழைப்பு தருவீரா
ReplyDelete