இந்திரா காந்தி திறந்த வெளி பல்கலைக்கழக மண்டல இயக்குநரின் கடிதத்தில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக புதிதாக ( PGDET - Post Graduate Diploma in Educational Technology ) என்ற பட்டப் படிப்பு தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதில் ஆசிரியர்கள் சேர்வதற்கான பயிற்சிக் கட்டணத்திற்கு நிதியுதவி செய்து ஆசிரியர்கள் சேர்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரியுள்ளார். இப்பட்டயப் படிப்பில் ஆசிரியர்கள் பயிற்சி பெறுதல் சார்ந்து ரூ .6600 / பயிற்சிக் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் இது ஓராண்டு முதல் மூன்றாண்டு முடிய உள்ள பயிற்சிக் காலம் எனவும் , ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களில் இதற்கான சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்காண் பொருள் சார்பாக தகுதியுள்ள ஆசிரியர்கள் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திற்கு செலுத்தப்படும் பயிற்சி கட்டணம் ஆசிரியர்களே செலுத்தி பயிற்சி பெறலாம் எனவும் , அவ்வாறு பயிற்சியில் சேரும் ஆசிரியர்கள் துறை அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவித்து உரி நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவிக்கலாகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...