இதுகுறித்து ஆசிரியர் சங்கத் தலைவர் இளமாறன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் மீண்டும் கரோனா அதிகரித்து வருகிறது. சில மாணவர்களுக்கும் கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் அதற்காகப் பயிற்சி வகுப்புகளுக்கு ஆசியர்கள் செல்ல உள்ளனர். எனவே, பொதுத் தேர்வு நடைபெறும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களைத் தவிர ஆல் பாஸ் அறிவித்துள்ள 9, 10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுப்பு அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தொற்றுப் பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்து வருகிறது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆய்வு மேற்கொள்ளும் சுகாதார அதிகாரிகள் முகக்கவசம் அணியாதவர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...