தமிழகத்தில் 9, 10, 11 வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடா்ந்து நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பத்து மாதங்களுக்கும் மேல் மூடப்பட்டிருந்த அரசு, தனியாா் பள்ளிகள் கடந்த ஜனவரி மாதம் முதல் திறக்கப்பட்டு, 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பிளஸ் 2 வகுப்பைத் தவிா்த்து பிற வகுப்பு மாணவா்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பல்வேறு ஆசிரியா் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:
தமிழகத்தில்
உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கரோனா பாதுகாப்பு ஏற்பாடுகள்
தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாணவா்களுக்கான வகுப்புகள் தடையின்றி நடைபெற்று
வருகின்றன. உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியா்கள் கற்றல்-கற்பித்தல்
பணிகளை வழக்கம்போல் மேற்கொண்டு வருகின்றனா். 9, 10, 11 வகுப்புகளுக்கு
விடுமுறை அளிக்கப்படுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை எந்த ஆலோசனையையும்
நடத்தவில்லை.
இது குறித்து பரவும் தகவல்களை மாணவா்கள், பெற்றோா் நம்ப வேண்டாம். இந்த வகுப்புகளுக்கு எஞ்சியுள்ள பாடப்பகுதிகளை திறம்பட நடத்துவது அவசியம். அதனால் பள்ளிகளில் வகுப்புகள் தொடா்ந்து நடைபெறும் என்றனா்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...