இந்தத் தடுப்பு மருந்துகளை முதியோர்களும், 45 வயது முதல் 59 வயதுள்ள இணைநோய்கள் இருப்போரும் இலவசமாக செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது. இதையடுத்து இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் வேகமாக நடந்து வரும் சூழலில், இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு அம்சங்களை எய்ம்ஸ் மருத்துவனை இயக்குனர் ரன்தீப் குலேரியா விளக்கினார்.
கொரோனா வைரஸ் பரவல் அதிகரிப்புக்குப் பல்வேறு காரணங்களைக் கூறலாம். முதன்மையானது, மக்கள் மனநிலையில் ஏற்பட்டுள்ள என்ன செய்துவிடப்போகிறது கொரோனா எனும் மெத்தனப்போக்கான மனநிலைதான். எனவே மக்கள் அவசியமற்ற பயணங்களை இன்னும் கொஞ்ச காலம் தவிர்க்க வேண்டும். கொரோனா தடுப்பூசிகள் 8 முதல் 10 மாதங்கள் வரை தொற்றில் இருந்து பாதுகாக்கும். ஒருவேளை இன்னும் அதிகமும் இருக்கலாம். இரு தடுப்பூசிகளிலும் எந்தவிதமான மாறுபாடும் இல்லை. இரு தடுப்பூசிகளும் சமமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியவை. நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது இந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
இந்த கருத்தை நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பாலும் ஆமோதித்தார். இதுகுறித்து பேசிய அவர், “60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோயாளர்களிடமே அதிக உயிரிழப்பு காணப்படுகிறது. எனவே இந்த பிரிவினர் தடுப்பூசி போடுவதை தாமதிக்கக் கூடாது. குறைவான அளவே தடுப்பூசிகள் கிடைப்பதால்தான் அனைவருக்கும் செலுத்த முடியவில்லை. பெரும்பாலான நாடுகளில் முன்னுரிமை அளிக்கப்பட்ட வயதினருக்கு மேல் கொரோனா தடுப்பூசி வழங்க முடியாமல் தடுமாறுகிறார்கள்” என்று கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...