மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்தப்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தகுதியுள்ள அனைவரும் உடனடியாக பதிவு செய்து தடுப்பூசி போட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்றார்.
விஞ்ஞானிகள் மற்றும் உலக விஞ்ஞானிகள் அமைப்புகளின் ஆலோசனையின்படி, குறிப்பாக COVISHIELD கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸை 4-வது மற்றும் 8-வது வாரத்தில் வழங்க வலியுறுத்துகிறோம். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் விரைவில் தடுப்பூசி எடுக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம். அது அவர்களுக்கு கொரோனாவுக்கு எதிரான கேடயத்தை வழங்கும் என்று தெரிவித்தார். இணை நோய்கள் இல்லாதவர்களும் ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில், முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கோவிஷீல்டு தடுப்பூசியும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவோக்சின் தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது.இதையடுத்து நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு கடந்த மார்ச் 1ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்றைய நிலவரப்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 40,715 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29,785 பேர் குணமாகி உள்ளனர். 199 பேர் பலியாகி உள்ளனர். மொத்தம் 1,16,86,796 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை 1,60,166 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். அதேசமயம், கொரோனா பாதித்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,81,253 ஆக பதிவாகியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...