கொரோனா தொற்று காரணமாக 2019-2020 நிதியாண்டு, அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த நவம்பர் வரை வழங்கப்பட்டு இருந்தது. இந்த அவகாசம், டிசம்பர் வரை நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து தணிக்கை செய்ய வேண்டிய கணக்குகள் தாக்கல் செய்ய இன்று பிப்ரவரி 15-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. வரி செலுத்துவோரின் கோரிக்கையை ஏற்று, அபராதமின்றி, தணிக்கை செய்யக்கூடிய கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்று வரை நீட்டிக்கப்பட்டது. இன்று வரை அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்யலாம்.
இன்று கணக்கு தாக்கல் செய்யாத ரூ.5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தி, நாளை முதல் கணக்கு தாக்கல் செய்யலாம். வருகிற மார்ச் 31-ந்தேதிக்கு பின் கணக்கு தாக்கல் செய்ய முடியாது. மேற்கண்ட தகவல்களை வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...