கொரோனா ஊரடங்கு காலத்தில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வை எழுத முடியாமல் போன வயது வரம்பை கடந்தவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. நோயின் பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தால் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் இயல்பு நிலை பெரிதும் பாதித்தது. ஊரடங்கின் காரணமாக பல முக்கிய நிகழ்வுகள் மற்றும் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் சில முக்கிய தேர்வுகள் மட்டும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடத்தப்பட்டது.
அந்த வகையில் ஊரடங்கு காலத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. இதனால் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்தவர்கள் பலர் டெட் தேர்வை எழுத முடியவில்லை. அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவது குறித்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அமைச்சரின் அறிக்கை:
செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆய்வு நடந்து வருகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத 45 வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காலத்தில் ஆசிரியர் தேர்வாணையம் நடத்திய டெட் தேர்வை எழுத முடியாத வயது வரம்பை கடந்தவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு வழங்குவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது என்று கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...